ஹஜ் விவகாரம்: 65 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகள் கட்டணத்தை மீளப் பெறலாம்

கடந்த காலங்­களில் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­காக 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் செலுத்தி பதிவு செய்து கொண்­டுள்ள 65 வய­துக்கு மேற்­பட்ட விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பதி­வுக்­கட்­ட­ணத்தை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து மீளப் பெற்­றுக்­கொள்­ளலாம் என அரச ஹஜ் குழு அறி­வித்­துள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் ஹஜ் உம்ரா அமைச்சு ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ளும் பய­ணி­களின் வய­தெல்­லையை 65 வய­தாக கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ள­தை­ய­டுத்து அரச ஹஜ் குழு இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ளது.

இது­தொ­டர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் கருத்து தெரி­விக்­கையில் ‘ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்கு கடந்த காலங்­களில் விண்­ணப்­பித்த ஆயி­ரக்­ க­ணக்­கா­னோரின்  நூற்­றுக்­க­ணக்­கான விண்­ணப்­ப­தா­ரிகள் 65 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சின் புதிய நிபந்­த­னை­களின் படி 65 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள முடி­யாது. மேலும் தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­கடி நிலைமை கார­ண­மாக விண்­ணப்­பித்­தோரில் அநேகர் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள இய­லாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். அவ்­வா­றா­ன­வர்கள் தங்­க­ளது விண்­ணப்­பப்­ப­திவுக் கட்­ட­ணத்தை மீளப்­பெற்­றுக்­கொள்ள முடியும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.

ஹஜ் விண்­ணப்ப பதிவுக் கட்டணத்தை மீளப்பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter