சகல பள்ளிவாசல்களுக்கும் விரைவில் பொதுவான யாப்பு

நாட்டில் இயங்கிவரும் அனைத்துப் பள்ளிவாசல்களையும் யாப்பு ஒன்றின் கீழ் இயங்கச் செய்தவற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பெரும்பாலான பள்ளிவாசல்கள் யாப்பு இன்றி இயங்கிவருவதால் பல்வேறு குழப்பங்கள் பதிவாகி வருவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பள்ளிவாசல்களை குழப்பங்கள் இன்றி சீராக இயங்கச் செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாதிரியாப்பு ஒன்றினை வடிவமைத்துள்ளது. இந்த யாப்பின் வரைபு வக்பு சபையின் அனுமதியுடன் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் இரண்டு மாத காலத்துக்குள் இச்செயற்திட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் ‘விடிவெள்ளிக்கு’ க்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் பெரும் எண்ணிக்கையிலான பள்ளிவாசல்கள் எதுவுமின்றி தன்னிச்சையாக இயங்கிவருகின்றன. இதனாலேயே பள்ளிவாசல்களில் அடிக்கடி பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. யாப்புகளைக் கொண்டுள்ள பள்ளிவாசல்கள் கூட அந்த யாப்புகளின் வழிமுறைகளைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.

திணைக்களத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள யாப்புடன் பள்ளிவாசல்கள் தங்களது ஊர் வழமைகள் மற்றும் பாரம்பரியங்களையும் உள்ளடக்கிக் கொள்ள முடியும். பொதுவான யாப்பு முறைமை பள்ளிவாசல்கள் இன்மையால் 60% முதல் -70% வரையிலான பள்ளிவாசல்களின் நிர்வாக சபைத் தெரிவுகள் தொடர்பில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பள்ளிவாசல்களுக்குரிய மாதிரி யாப்பு விரைவில் நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. குறிப்பிட்ட யாப்புக்கு புறம்பாக தன்னிச்சையாக செயற்படும் பள்ளவாசல் நிர்வாகங்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பள்ளவாசல்களை நிர்வாகங்களும், ஜமா அத்தாரும் இறையில்லங்களாக கருதி செயற்படவேண்டும் என்றார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 15/9/2022 பக்கம் 01

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter