பதுக்கலை தடுக்க சடுதியான குறைப்பு அவசியம்

பிரச்சினைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்குமென வானத்தையே பார்த்துக்குக்‌ கொண்டிருக்கும்‌ மக்களுக்கு “விலைக்குறைப்பு” எனும்‌ செய்தி, காதுகளுக்கு தேன்‌ சொரிவதாய்‌ அமைந்திருக்கும்‌. எனினும்‌, கப்பல்‌ வருகிறது கப்பல்‌ வருகிறது என்ற கதையாகிவிடாமல்‌, யதார்த்தமாக விலைக்குறைப்பு இருக்கவேண்டும்‌ என்பதே பலரதும்‌ எதிர்பார்ப்பாகும்‌.

விலைக்குறைப்பு அறிவிப்பை கேட்டவுடன்‌, பதுக்கல்‌ வியாபாரத்தில்‌ ஈடுபடுவோரின்‌ முகங்கள்‌ சுருங்கிவிடும்‌. அதிகரிக்கப்பட்ட விலையில்‌ பொருட்களைக்‌ கொள்வனவு செய்துகொண்டு, குறைந்த விலையில்‌ விற்பனை செய்வதை, பதுக்கல்காரர்கள்‌ ஒருபோதும்‌ விரும்பமாட்டார்கள்‌.

நாட்டுக்குள்‌ பிரச்சினைகள்‌ இருக்கும்‌ வரையிலும்‌ பதுக்கல்‌ வர்த்தகத்தில்‌ ஈடுபடுவோரே கொள்ளை இலாபம்‌ ஈட்டுவர்‌. பொருட்களுக்கு இயற்கையாகவே தட்டுப்பாடுகளை ஏற்படுத்துவர்‌. இதையொரு வர்த்தக இராஜதந்திரம்‌ என்றும்‌ கூறிக்கொள்வர்‌. எனினும்‌, ஆகக்குறைந்த நிர்ணய விலை நிர்ணயிக்கப்படுமாயின்‌, நுகர்வோரும்‌ பிரச்சினைகள இன்றி, பொருட்களைக்‌ கொள்வனவு செய்வர்‌.

எரிபொருட்கள்‌ சமையல்‌ எரிவாயு என்பவற்றில்‌ விலைகள்‌ குறைக்கப்படவுள்ளன என்ற அறிவிப்பானது, நுகர்வோருக்கு மகிழ்ச்சியூட்டுவதாய்‌ இருக்கிறது. எனினும்‌ பெருந்தொகையில்‌ களஞ்சியப்படுத்தி இருப்போருக்கும்‌ கறுப்புச்‌ சந்தையில்‌ விற்பதற்கு சடடவிரோதமான முறையில்‌ சேமித்து வைத்திருந்தோருக்கும்‌, விலைக்குறைப்பு அறிவிப்பு பெரும்‌ தலையிடி யாய்‌ இருக்கும்‌.

ஆனாலும்‌, கறுப்புச்‌ சந்தைக்காரர்களின்‌ கைகளை கட்‌டவேண்டுமாயின்‌, விலையை குறைப்பதற்கு தீர்மானித்திருக்கும்‌ முடிவில்‌ சிறு மாற்றங்களை ஏற்படுத்தி, அதனை விடவும்‌ இரண்டொரு மடங்குகளில்‌ விலைகளை குறைத்துவிடவேண்டும்‌. அப்போதுதான்‌, பதுக்கல்காரர்களுக்கு ஒரு பாடத்தை கற்பித்துக்கொடுக்கமுடியும்‌.

எரிபொருட்கள்‌, சமையல்‌ எரிவாயுகளின்‌ விலைகள்‌ அதிகரிக்கப்பட்ட போதெல்லாம்‌ அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ விலைகள்‌, சேவைக்கட்டணங்கள்‌, போக்குவரத்துச்‌ செலவுகள்‌ உள்ளிட்டவை சடுதியாக, மறுகணமே அதிகரறிக்கப்பட்டன;. அதேபோல, விலைக்குறைப்பின்‌ போதும்‌, இவையாவும்‌ குறைக்கப்படவேண்டும்‌. இல்லையேல்‌, நுகர்வோருக்கு எவ்விதமான நன்மையும்‌ கிடைக்காது.

உதாரணமாக, சமையல்‌ எரிவாயுவின்‌ விலைகள்‌ குறைக்கப்பட்டபோது, ஹோட்டல்கள்‌, சிற்றுண்டிச்சாலைகள்‌, வெதுப்பகங்கள்‌ என சாப்பாட்டுப்‌ பொருட்களின்‌ அளவுகளும்‌ குறைக்கப்பட்டன; விலைகளும்‌ கூட்டப்பட்டன. அவற்றில்‌ மாற்றங்களை ஏற்படுத்தும்‌ வகையில்‌ நுகர்வோர்‌ அதிகார சபையினர்‌ கண்காணிக்க வேண்டும்‌.

பல நாள்களாக கண்விழித்து, மழை வெயில்‌ பாராது, கால்கடுக்க வரிசையில்‌ நின்று எரிபொருளை பெற்றுக்கொள்வோந்‌, வீடுகளுக்குத்‌ திரும்பியவுடன்‌ அவற்றை கேன்களில்‌ நிரப்பிக்கொள்வதை பலரும்‌ படம்பிடித்துள்ளனர்‌. எனினும்‌, வீடுகளுக்கு வெளியில்‌ வாகனங்களை நிறுத்திவிட்டுச்‌ சென்றுவிட்டால்‌, அதிலிருந்து எரிபொருள்‌ களவாடப்படுகின்றது. அதனை பாதுகாப்பதற்கே, எரிபொருள்‌ நிரப்பிய கேன்களை வீட்டுக்குள்‌ வைத்துக்கொள்கின்றோம்‌ என பலரும்‌ விளக்கமளிக்கின்றனர்‌.

மிக இலகுவில்‌ தீப்பற்றக்கூடிய எரிபொருட்களை வீட்டுக்குள்‌ வைத்திருப்பது பேராபத்தானது என்பதை நினைவில்‌ கொள்வதுடன்‌, சகலருக்கும்‌ சேவைகள்‌ கிடைக்குமாயின்‌ வரிசைகளை குறைப்பது வெகு தொலைவில்‌ இல்லை என்பதே எமது அவதானிப்பாகும்‌.

தமிழ்மிர்ரர் 02/08/2022 பக்கம் 06

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter