அக்குறணை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த மணல் சுத்திகரிப்பு இயந்திரத்தின் செயற்பாடுகள்

அக்குறணை பிரதேசத்தின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மணல் சுத்திகரிப்பு இயந்திரத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்…

கடந்த 25 வருட காலமாக அக்குறணை பிரதேசத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆற்றில் சேரும் மண்ணை அகழ்ந்து எடுத்து மணலினை சுத்திகரித்து பயன்படுத்தக்கூடிய செயல்திட்டம் நேற்றைய தினம் ( 30.07.2022) ஆரம்பிக்கப்பட்டது.

இச்செயற் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து அக்குறணை பிரதேச சபையிடம் கையளிக்கின்ற நிகழ்வு நேற்றைய தினம் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. சுமார் பத்து மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த செயற் திட்டத்தை கட்டம் கட்டமாக நாம் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்து இருக்கின்றோம்.

இந்த செயற் திட்டத்தை சாத்தியப்படுத்த உதவி புரிந்த சர்வ மத தலைவர்கள், மத அமைப்புக்கள், இந்தத் திட்டத்திற்கு நிதி உதவிகளை வழங்கிய US AID SCORE நிறுவனத்தின் பணிப்பாளர் ட்ரவிஸ் கார்னர் அவர்கள் உட்பட முகாமையாளர் சத்துரிகா அவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் லசந்த அவர்கள், இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்புக்களை வழங்கி ஆதரவளித்த பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் அவர்கள், மத்திய மாகாண ஆணையர் மேனக ஹேரத் அவர்கள், துணை ஆணையர் நிலுகா அவர்கள், அக்குறணை பிரதேச செயலாளர் உட்பட இந்த செயற் திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், அலவதுகொடை பொலிஸ் நிலையம், அக்குறணை வர்த்தகர் சங்கங்களின் தலைவர்கள் உட்பட வர்த்தகர்கள் என அனைவருக்கும் தவிசாளர் என்கிற வகையில் நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கள் உண்மையில் பெருமதி மிக்கவை.

பீங்க ஓயா A9 வீதியை ஊடறுத்து செல்வதின் காரணமாக இங்கு ஏற்படும் வெள்ளப்பெருக்கு தேசிய அளவில் பொருளாதார பாதிப்புகளையும் நஷ்டங்களையும் ஏற்படுத்தி வந்தது. இந்த வெள்ள அனர்த்தத்தை தீர்ப்பதற்கு நீண்ட காலமாக பல தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனினும் நடைமுறையில் அவற்றை அமுல்படுத்த கூடியதாக இருக்கவில்லை. என்ற பொழுதிலும் இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தமைக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து ஒரே குழுவாக செயலாற்றியதே காரணம் எனலாம். இது சமூகங்களுக்கிடையே சகவாழ்வினை ஏற்படுத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்தத் திட்டத்திற்கு தங்களது பரிபூரண ஒத்துழைப்புகளை வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த செயற் திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்படுவதினூடாக அக்குறணை பிரதேசம் தொடர்ந்து எதிர்க் கொண்டு வரும் வெள்ளப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத்தர முடியும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். மேலும் இத்திட்டத்தின் ஊடாக தொழில் முனைவுகளை ஏற்படுத்த முடிவதோடு பல புதிய வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்க முடியும். இது மாத்திரமன்றி குறைந்த விலையில் பிரதேச சபையினூடாக கட்டுமானப் பணிகளுக்கு மணல் விநியோகம் மேற்கொள்ள முடியுமாக இருக்கும்.

இந்த செயல்திட்டம் தொடர்பாக உங்களிடம் ஆலோசனைகள் இருப்பின் சமூக வலைத்தளங்களின் வாயிலாக அல்லாமல் நேரடியாக தொடர்பு கொண்டு வழங்குவதை நாங்கள் வெகுவாக வரவேற்கின்றோம்.

akurana-flood-2022-01
akurana-flood-2022-02
akurana-flood-2022-03
akurana-flood-2022-04
akurana-flood-2022-05
akurana-flood-2022-06
akurana-flood-2022-07
akurana-flood-2022-08
akurana-flood-2022-09

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter