பள்ளிகளில் கொவிட் விதிமுறைகளை மீள பேணுவது சிறந்தது:திணைக்களம்

நாட்டில் மீண்டும் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிவாசல்களில் தொழுகைகளை நிறைவேற்றுபவர்கள் தாம் விரும்பினால் மாஸ்க் அணிந்து செல்வதுடன் தங்களுடன் தொழுகை விரிப்பினை (முசல்லா) எடுத்துச் செல்வது பாதுகாப்பானது என முஸ்‌லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு இதுவரை பள்ளிவாசல்களுக்கு புதிய வழிகாட்டல்களை வழங்கவில்லை. புதிய வழிகாட்‌டல்கள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை நாட்டில் 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் முஸ்லிம்கள் கொவிட் தொற்றிலிருந்தும் பாதுகாப்பு பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

(ஏ.ஆர்.ஏ. பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 28/07/2022 பக்கம் 01

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter