உலமா சபையின் தலைமை பொறுப்பை ஏற்க ஒருவாரகால அவகாசம் கோரினார் ரிஸ்வி முப்தி

“அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் புதிய தலைவராக மீண்டும் நான் மூன்று வருடகாலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளேன். அத்தெரிவு ஜனநாயக ரீதியில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றது என்றாலும் தலைமைப்பதவியில் இருப்பதா? இல்லையா? என்று இஸ்திகாரா (Isthikhara) செய்து தீர்மானிக்க உலமா சபையின் புதிய நிறைவேற்றுக்குழுவிடம் ஒருவாரகால அவகாசம் கோரியுள்ளேன்” என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் புதியநிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக்கூட்டம் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை கண்டி கட்டுக்கலை ஜும் ஆ பள்ளிவாசலில் இடம் பெற்றது. நிகழ்வில் உலமாசபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித் வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். கலீல் கணக்கறிக்கையைச் சமர்ப்பித்தார். அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்விமுப்தி தலைமை உரை நிகழ்த்தினார்.

இதனையடுத்து பழைய நிறைவேற்றுக்குழு கலைக்கப்பட்டு புதிய நிறைவேற்றுக்குழு தெரிவு தற்காலிக தலைவர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம். இல்யாஸ் தலைமையில் நடைபெற்றது. 24 மாவட்ட மத்திய சபை உறுப்பினர்களான 24 மாவட்ட கிளைத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உட்பட 103 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 30 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழு எதிர்வரும் 3வருட காலத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது.

எதிர்வரும் 3 வருட காலத்துக்கு தலைவராக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி சுமார் 20 வருட காலமாக 9 தடவைகள் தலைவராக தெரிவு செய்யப்பட்டவராவார். இவர் 2001 இல் உலமா சபையின் யாப்பு முறையாக அமையவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தனது தலைமைப்பதவியை இராஜினாமா செய்தார் என்றாலும் 2003 ல் மீண்டும் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். 2004 ன் பின்பு ஒவ்வோர் மூன்று வருட காலத்திற்கும் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் 2016 ல் மற்றும் 2019 ல் தான் பதவியிலிருந்து அகலுவதற்கு அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்வருவோர் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர்: அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி
செயலாளர்‌: அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித்
பொருளாளர்: அஷ்ஷெய்க் ஏ.ஏ.அஹ்மத் அஸ்வர்
உபதலைவர்கள்: அஷ்ஷெய்க் எச்.உமர்தீன்
அஷ்ஷெய்க். எம்.ஜே.அப்துல் காலிக்
அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.றிழா
அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம்
அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.கலீல்
உபசெயலாளர்கள் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸீம்
அஷ்ஷெய்க் ஏ.ஸீ.எம்.பாழில்
உபபொருளாளர் அஷ்ஷெய்க் எம்.கே.அப்துல் ரஹ்மான்
உறுப்பினர்கள் அஷ்ஷெய்க்
எம்.எல்.எம்.இல்யாஸ்
அஷ்ஷெய்க் கே.எம்.அப்துல் முக்ஸித்
அஷ்ஷெய்க் எம்.எம்.ஹஸன் பரீத்
அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.முபாரக்
அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முர்ஷித்
அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.புர்ஹான்
அஷ்ஷெய்க் எஸ்.எல்.நெளபர்
அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத்
அஷ்ஷெய்க் எஸ்.ஏ.எம்.ஜவ்பர்
அஷ்ஷெய்க் ஏ.ஆர்.அப்துர் ரஹ்மான்
அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். பரூத்
அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத்
அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.பாஸில்
அஷ்ஷெய்க் எம்.எச்.எம். யூசுப் முப்தி
அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா
அஷ்ஷெய்க் எம்.ரிபாஹ்
அஷ்ஷெய்க் எம்.டீ.எம். லரீப்
அஷ்ஷெய்க் கே.ஏ.ஸகி. அஹமத்
அஷ்ஷெய்க் ஏ.எல்.அப்துல் கப்பார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை – பக்கம் 01 – 23/6/2022

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter