நல்ல நேரம் வரும்வரை காத்திருப்பது, சிறந்ததல்ல!

அடுத்தது என்னவென சதாகாலமும்‌ பலரும்‌ புலம்பிக்கொண்டிருப்பதை கேட்கக்கூடியதாய்‌ இருக்கிறதே தவிர, மாற்றுவழிகளைப்‌ பற்றி ஒருசிலரைத்‌ தவிர ஏனையோர்‌, சிந்திப்பதே இல்லையென்றால்‌ அது அச்சொட்டாக சரியானதாய்‌ இருக்கும்‌. வழியொன்று மூடப்பட்டிருக்குமாயின்‌ மாற்றுவழிகளில்‌ பயணித்து, செல்லவேண்டிய இடத்துக்குச்‌ சென்றுவிடவேண்டும்‌.

வழி மூடப்பட்டுவிட்டதால்‌ நெருக்கடிக்குள்‌ சிக்கிக்கொண்டு விட்டோமென நினைத்துக் கொண்டிருப்பது காலத்தையும்‌ நேரத்தை வீணடிக்கும்‌ செயலாகும்‌. “மாற்று சிந்தனை” ஒவ்வொருவிடத்திலும்‌ தோன்றவேண்டும்‌. எமது நாடு முகங்கொடுத்திருக்கும்‌ இந்தப்பிரச்சினையால்‌ பல தொழில்கள்‌ முற்றாக முடங்கிவிட்டன.

சிலவற்றுக்கு மாற்று முறைமை உள்ளது. பலவற்றுக்கு அது கிடையாது. மிகச்சரியான மாற்று முறைமைகளை கையாளாவிடின்‌, உயிரிழப்புக்‌ கூட ஏற்பட்டுவிடும்‌. ஆகையால்‌, ஒன்றுக்கு பலமுறை சிந்திப்பதே சிறந்ததாகும்‌.

ஒவ்வொருடைய வீடுகளில்‌ இருக்கும்‌ சிறு இடத்தில்‌, ஏதோவொரு மரக்கறியை வளர்த்தெடுத்தால்‌, சிறிய குடும்பம்‌ ஒன்றுக்கு ஒருவேளைக்குத்‌ தேவையான மரக்கறிகளை பெற்றுக்கொள்ளலாம்‌. அது சதாகாலமும்‌ மரக்கறி சந்தையில்‌ தங்கி வாழ்வதைத்‌ தவிர்க்கும்‌. அதனை வழக்கப்படுத்திக்கொண்டால்‌, விளைச்சலை அதிகரித்‌துக்கொண்டே போகலாம்‌.

பெரும்‌ நகரங்களில்‌ வாழ்வோரும்‌, அடுக்குமாடிகளில்‌ வாழ்வோரும்‌ ஆகக்‌ குறைந்தது ஒரு பூச்சாடியையேனும்‌ வைத்திருப்பர்‌. அதில்கூட, ஆய்ந்துக்கொள்ளும்‌ அளவுக்கு சிறிய மரக்கறியை வளர்த்தெடுக்கலாம்‌. பிரதான மரக்களுடன்‌ இணை மரக்கறியாக பயன்படுத்திக்கொள்ள முடியும்‌. கொரோனா காலத்தில்‌ நாடு மூடப்பட்டிருந்த காலங்களில்‌, பலரும்‌ இவ்வாறான முறைமைகளில்‌ முயன்று வெற்றி கண்டுள்ளனர்‌.

மாற்று சிந்தனையானது எல்லாவற்றுக்கும்‌ சரிப்பட்டுவராது. உதாரணமாக காத்தான்குடியில்‌ பாலமுனை கடலில்‌, மீன்பிடி ப்பதற்காக படகில்‌ செல்லவேண்டிய மீனவர்களில்‌ சிலர்‌, சாதாரண தோணியில்‌ பயயணித்தபோது, அந்தத்‌ தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனால்‌, ஒருவர்‌ மரணித்துள்ளார்‌. கடலில்‌ மீன்பிடித்‌ தொழிலில்‌ ஈடுபடுபவர்களுக்கு மாற்று வழியே இல்லை. இப்படி சில தொழில்களை கூறலாம்‌.

மீன்பிடிப்பதற்குப்‌ போதுமானளவு மண்ணெண்ணெயைப்‌ பெற்றுக்கொடுத்தால்‌, மீன்களின்‌ விலை குறையும்‌. சாதாரண மக்களும்‌ மீன்களைக்‌ கொள்வனவு செய்து, சமைத்து உண்ணமுடியும்‌. தேவையான அளவுக்கு கிடைக்காவிடினும்‌, ஓரளவுக்கேனும்‌ புரதம்‌ கிடைக்கும்‌.

“பஞ்சத்தால்‌ தெருக்களில்‌ மக்கள்‌ செத்து மடிவார்கள்‌” என முன்னாள்‌ கணக்காய்வாளர்‌ நாயகம்‌ காமினி விஜேசிங்கவின்‌ கூற்று மெய்பிக்கக்கூடாது. அக்கூற்றை பொய்ப்பிக்க வேண்டுமாயின்‌, ஒவ்வொருவரும்‌ முயற்சிக்க வேண்டும்‌. கையேந்துவதை ஓரங்கட்டிவிட்டு, உழைப்பை கையிலெடுக்க வேண்டும்‌.

ஒவ்வொருவரும்‌ நினைத்தால்‌ முடியாதது ஒன்றுமே இல்லை என்பதால்‌, இன்றிலிருந்தாவது ஒவ்வொருவரும்‌ முயற்சி செய்யுங்கள்‌. எல்லாவற்றையும்‌ கொள்வனவு செய்யமுடி யாத நிலைமையொன்று வெகு விரைவில்‌ ஏற்படக்கூடுமென ஆரூடம்‌ கூறப்பட்டுள்ளது.

ஆகையால்‌, நல்லநேரம்‌ வரும்வரையில்‌ காத்துக்கொண்டிருக்காமல்‌, எந்நேரமும்‌ நல்லநேரமென நினைத்து, ஆரம்பப்‌ புள்ளியை வையுங்கள்‌ என்பதே எமது தாழ்மையான யோசனையாகும்‌.

Tamil Mirror 28/5/22 Page 06

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter