அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலை 10வது ஆண்டு – அதிபர் செய்தி

2011 ஆம் ஆண்டு 1000 பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்ஹர் தேசிய பாடசாலை உள்வாங்கப்பட்டதையடுத்து வேறாக்கப்பட்ட அதன் ஆரம்பப்பிரிவும் மூடப் பட்ட குருகொடை முஸ்லிம் பாலிகா பாடசாலையின் ஆரம்பப்பிரிவும் இணைந்து குருகொடை முஸ்லிம் பாலிகா பாடசாலையின் மண்ணிலேயே மறு உருவாக்கம் பெற்ற புதிய ஆரம்பப் பாடசாலையே எமது தற்போதைய அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலை ஆகும்.

நாடளாவிய ரீதியில் 2012 ஆம் ஆண்டு பல மாதிரி ஆரம்பப் பாடசாலைகள் உருவாக்கப்பட்ட போதிலும் இப்பாடசாலையின் ஆரம்பமும் வரலாறும் தனித்துவமானதே! தனது பெயரில் ஊட்டப் பாடசாலையின் பெயரை சுமந்து வலம் வரும் ஓரு மாகாண பாடசாலையாக எமது பாடசாலை அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

2012.01.19 இல் ஆரம்பித்த எமது பாடசாலையின் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை மாணவர்கள், ஆசிரி யர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் ஒன்றியம் மற்றும் நலன்விரும்பிகளின் உதவிகள் ஒத்தாசைகளுடன் ஒழுங்கமைக்கவும் நிறைவேற்றவும் முடிந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

2012 ஆம் ஆண்டு புதிதாக உருவெடுத்த இப்பாடசாலையின் முதல் அதிபர் நான்கு வருட கால சேவைக்குப் பின்னர் இரண்டாவது அதிபராகப் 2016.01.19ஆம் திகதி பொறுப்பேற்ற எஸ். ஏ.எப். ஜிம்னாஸ் ஆகிய நான் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கான என்னாலான அர்ப்பணிப்பையும் உழைப்பையும் வழங்கி வருகிறேன்.

பாடசாலையை பொறுப்பேற்று 6 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக என்னோடு கைகோர்த்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் எனது ஆசிரியர் குழாம் தன்னலம் பாராமல் இயங்கிக் கொண்டிருக்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் உட்பட உறுப்பினர்கள் பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள். பெற்றார்கள். நலன்விரும்பிகள் மாணவர்கள், பழைய மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்வதோடு எனக்கு எப்போதும் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருக்கும் எனது குடும்பத்தினருக்கும் வழிகாட்டிக்கொண்டிருக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தசாப்த நிறைவை முன்னிட்டு

  1. மாணவர்களுக்கான பல்வேறு ஆக்கத்திறன் வெளிப்பாடு போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு
  2. பழைய மாணவர்களையும் தற்போதைய மாணவர்களையும் பங்கேற்கச் செய்யும் வகை யிலான 3 நாள் கண்காட்சி
  3. 2022.01.19 ஆம் திகதியன்று சகல மாண வர்களும் தனது பாடசாலையின் பிறந்த நாளை உணரும் வகையிலான கொண்டாட்ட நிகழ்வும் காலைக்கூட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

தசாப்த விழாவில்

  1. பாடசாலையின் வளர்ச்சி கண்ணோட்டம் அடங்கிய காணொளி வெளியிடல்
  2. பாடசாலை வளர்ச்சிக்கு அயராது உழைத்த வர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
  3. நினைவு மலர் வெளியீடு
  4. இணைய வலையமைப்பு அமுலாக்கல் நிகழ்வு
  5. பாடசாலையின் முதல் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சேவையாற்றும், இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்கள்,உதவியாசிரி யர்கள் கௌரவிப்பு
  6. மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகள் மேடையேற்றல்

தசாப்த விழாவின் பிரதம அதிதிகள்

மத்திய மாகாண பிரதான மற்றும் கல்விச் செயலாளர் ஜி. எச். எம். ஏ. பிரேமசிங்ஹ பிரதம அதிதியாகவும் மத்திய மாகாண கல்வித் திணைக் களத்தின் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ஜி. அமரசிறி பியதாச கௌரவ அதிதியாக கலந்து சிறப்பிக்கின்றனர்.அத்தோடு மாகாண கல்வித் திலைணக்கள மேலதிக கல்விப் பணிப்பாளர் சி.டி.ஜி.மாயாதுன்ன, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விப் பணிப்பாளர் முத்ரிதா யாப்பாரத்ன.த மிழ் மொழி மூல உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். எம். ராஸிக் மேலும் பல பிரமுகர்க ளும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

10 வருட பூர்த்தி செய்த நிலையில் வரலாற்று சாதனைகள்

2022 நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாண வர்களைச் சித்தியடையச் செய்து கட்டுகஸ் தோட்டை வலய தமிழ் மொழி மூல பாடசாலைக ளில் அதிக மாணவர்களை சித்தியடையச் செய்த முன்னணி பாடசாலையாக இருப்பதோடு மட்டு மன்றி ஜே. எம். ஷரப் என்ற மாணவன் 190 புள்ளிகளைப் பெற்று மாகாணத்தில் அதிக புள் ளிகள் பெற்ற தமிழ்மொழி மூல மாணவனாக திகழ்வதும் வரலாற்றில் பதியப்பட வேண்டிய மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். (தினகரன் 21/3/2022)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter