கொவிட் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அந்தந்த பிரதேசத்தின் மையவாடிகளில் நல்லடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்ததையடுத்து மாளிகாவத்தை மையவாடியில் முதலாவது ஜனாஸா கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, இதுவரை மூன்று ஜனாஸாக்கள் மஜ்மா நகருக்கு வெளியேயுள்ள மையவாடிகளில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி, கண்டி மற்றும் அநுராதபுரத்திலும் இவ்வாறு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.
எந்தவொரு மையவாடியிலும் நல்லடக்கம் செய்யும் பணிகள் கடந்த மார்ச் 5 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை முதல் அனுமதிக்கப்பட்டது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள EPID/400/2019/n- CoV எனும் சுற்று நிருபம் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
விடிவெள்ளி பத்திரிகை 2022-03-17