பேரீத்தம் பழ இறக்குமதிக்கான கட்டுப்பாடு நீக்கப்படவில்லை

பேரீத்தம் பழ இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டுகள் இன்னும் நீக்­கப்­ப­ட­வில்லை என நிதி அமைச்சின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் விடி­வெள்­ளிக்கு நேற்று தெரி­வித்தார். குறித்த கட்­டுப்­பாட்டை நீக்­கு­வது தொடர்பில் நிதி அமைச்­சினால் இது­வரை எந்­த­வொரு தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். பேரீத்­தம்­பழம் உட்­பட 367 பொருட்­களை இறக்­கு­மதி செய்ய கடந்த மார்ச் 9ஆம் திகதி முதல் கட்டுப்பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷ­வினால் 2270/18ஆம் இலக்க அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த கட்­டுப்­பா­டி­னை­ய­டுத்து பல பொருட்­களின் விலைகள் திடீரென அதி­க­ரிக்­கப்­பட்­டன. புனித ரமழான் மாதத்­திற்கு இன்னும் 15 நாட்­களே உள்ள நிலையில் இறக்­கு­மதி கட்­டுப்­பாடு கார­ண­மாக பேரீத்தம் பழங்­களின் விலைகள் சுமார் 100 சத­வீ­தத்­தினால் அதி­க­ரிக்­கப்­பட்­டன.

இந்த திடீர் அதி­க­ரிப்பு தொடர்பில் சமூக ஊட­கங்­களில் பாரிய விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இவ்­வா­றான நிலையில் பேரீத்தம் பழங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை­யினை நீக்­கு­மாறு 20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

நீதி அமைச்சர் அலி சப்ரி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இஷாக் ரஹ்மான், எம்.எஸ்.தௌபீக், அலி சப்ரி ரஹீம், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், மர்ஜான் பழீல் மற்றும் எம். எம்.முஷர்ரப் ஆகியோர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினை சந்­தித்து இந்த கோரிக்­கை­யினை முன்­வைத்­துள்­ளனர்.
இந்த கோரிக்­கை­யினை அடுத்து சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ உட­ன­டி­யாக பணிப்­புரை வழங்­கி­ய­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மர்ஜான் பழீல் ஊட­கங்­க­ளுக்கு அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டி­ருந்தார்.

அத்­தோடு பள்­ளி­வா­சல்­க­ளுக்­காக தரு­விக்­கப்­படும் பேரீத்தம் பழத்­துக்­கான வரி­யி­னையும் அற­வி­டா­தி­ருக்­கு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்த மர்ஜான் பழீல், அதற்கும் உடன்­பாடு காணப்­பட்­ட­தாக குறிப்­பிட்டார்.
எனினும், குறித்த சந்­திப்பு இடம்­பெற்று ஒரு வாரம் கழிந்­துள்ள நிலை­யிலும், பேரீத்தம் பழ இறக்­கு­ம­திக்­கான கட்­டுப்­பா­டுகள் நீக்கம் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இறக்­கு­மதி கட்­டுப்­பாட்­டா­ளரின் உத்­தி­யோ­க­பூர்வ அனு­ம­தி­யின்றி பேரீத்தம் பழ இறக்­கு­ம­திக்கு சுங்கத் திணைக்­களம் ஒரு­போதும் அனு­ம­திக்­காது.
இதே­வேளை, பேரீத்தம் பழம், அப்பிள், ஒரேஞ் மற்றும் மாஜரின் உள்­ளிட்ட 9 வகை­யான பொருட்­களின் இறக்­கு­ம­திக்கு விசேட சுங்க வரியொன்று நிதி அமைச்சின் கீழுள்ள வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தினால் கடந்த மார்ச் 9ஆம் திகதி விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ பேரீத்தம் பழத்திற்கு 200 ரூபா விசேட சுங்க வரி அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(றிப்தி அலி) விடிவெள்ளி பத்திரிகை 2022-03-17 00:00:00

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter