தப்தர் ஜெய்லானி விவகாரம் : பேச்சுவார்த்தையே நன்மை பயக்கும்

‘கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் இருப்­புக்கு எதி­ராக உரு­வா­கி­யுள்ள சவால்­களை முஸ்லிம் சமூகம் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் சமா­தா­ன­மாக தீர்த்­துக்­கொள்ள வேண்டும். இரு தரப்பு பேச்­சு­வார்த்­தை­களே இன்­றைய சூழலில் நன்மை பயக்கும். இந்த நிலைப்­பாட்­டிலே நானும் இருக்­கிறேன்’ என நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை நீதி­ய­மைச்சர் அலி சப்ரி கொழும்பில் தனது இல்­லத்தில் தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகையில் இரு­த­ரப்பு சந்­திப்­பொன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். பள்­ளி­வா­ச­லுக்கு சவால் விட்­டுக்­கொண்­டி­ருக்கும் நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரரும் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். ஜெய்­லானி பள்­ளி­வாசல் தலைவர், நிர்­வா­கிகள், சூபி தரீக்கா உயர்­பீட உறுப்­பி­னர்கள், சட்­டத்­த­ர­ணிகள் என்போர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

நீதி­ய­மைச்சர் இச்­சந்­திப்பு தொடர்பில் தொடர்ந்தும் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், ‘பல தசாப்த கால­மாக இப்­பள்­ளி­வாசல் பிரச்­சினை தொடர்­கி­றது. இப்­பி­ரச்­சி­னைக்கு சுமுக தீர்வு காணும் நோக்­கு­டனே இச்­சந்­திப்­பினை ஏற்­பாடு செய்­தி­ருந்தேன். இப்­பி­ரச்­சி­னைக்கு சட்ட ரீதியில் தீர்வு காணு­வ­தென்றால் அதற்கு நீண்ட காலம் செல்லும். இந்­தி­யாவில் இது போன்ற பிரச்­சி­னையில் சட்­டத்தை அணு­கிய போது முஸ்லிம் சமூ­கத்­துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்­பட்­டது. இங்கு இந்­தியா பாபர் மஸ்ஜித் விவ­கா­ரத்தைக் குறிப்­பிட்டுக் கூறலாம். எனவே நாம் சுமு­க­மான பேச்­சு­வார்த்­தைகள் மூலம் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­வதே சிறந்­தது.

பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முதற்­கட்­ட­மாக நில அள­வை­யாளர் மற்றும் கட்­டடக் கலைஞர் அடங்­கிய குழு­வொன்று கூர­க­லக்கு விஜயம் செய்து பள்­ளி­வாசல் பற்றி ஆராய்ந்து அறிக்­கை­யொன்­றினைச் சமர்ப்­பிக்­கும்­படி கோரி­யி­ருக்­கிறேன்.
அதன்­பின்பு தொல்­பொருள் திணைக்­களம், புத்­த­சா­சன மற்றும் சமய கலா­சார அமைச்சு, வக்பு சபை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­ன­வற்­றுடன் கலந்­து­ரை­யாடி பிரச்­சி­னை­களைத் தீர்த்­துக்­கொள்ள முடியும் என நினைக்­கிறேன் என்றார்.
இதே­வேளை நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தப்தர் ஜெய்­லா­னியின் ஸியாரம் மற்றும் கொடி கம்பம் தவிர ஏனைய தகர கட்­ட­மைப்பு உட்­பட அனைத்தும் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கூர­கல தப்தர் ஜெய்­லானி உட்­பட்ட பிர­தேசம் சிவ­னொ­ளி­பாத மலை போன்று அனைத்து இன மக்­களும் விஜயம் செய்து வணக்க வழி­பா­டு­களில் ஈடு­படும் கலா­சார பிர­தே­ச­மாக அமைய வேண்டும் எனக் கூறி­யுள்ளார்.

இதேவேளை நீதியமைச்சர் அலிசப்ரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கட்டட கலைஞர், நில அளவையாளர் அடங்கிய நால்வர் கொண்ட குழு நேற்று மாலை கூரகலக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு ஜெய்லானி பள்ளிவாசலை ஆய்வு செய்தது. அக்குழு நெல்லிகல தேரரை சந்திக்கவும் ஏற்பாடாகியிருந்தது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2022-03-17

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter