பஸ் கட்டணத்திற்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டை

நேற்று (08) மின்சக்தி மற்றும எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருந்து தெரிவித்த அமைச்சர்,

எதிர்வரும் காலத்தில் பஸ் கட்டணத்திற்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டை ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

” தற்போது நிலவும கொவிட் 19 காரணமாக பணம் பரிவர்த்தனையின் போது குறித்த வைரஸ் பணம் மூலம் பொதுமக்களிடையே பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. விசேடமாக பயணிகள் பஸ் போக்குவரத்தின் போது அது இடம்பெறக்கூடிய அவதானம் அதிகமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக பரிந்துரைக்கப்பட்ட குறித்த முற்கொடுப்பனவு அட்டையை உடனடியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter