அரிசி விலையை கட்டுப்படுத்த வர்த்தக அமைச்சு நடவடிக்கை

சந்தையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக மியன்மாரில் இருந்து 100,000 மெற்றிக் தொன் வெள்ளை அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒரு மெற்றிக் தொன் அரிசியை 445 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே தடவையில் 20,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்து அவ்வப்போது சந்தைக்கு வெளியிட வர்த்தக அமைச்சு உத்தேசித்துள்ளது.

இந்த அரிசியை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலாவணியை மக்கள் வங்கிக்கு வழங்குமாறு வர்த்தக அமைச்சு மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  -தமிழ் மிற்றோர் (2022-02-07 07:38:08)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter