வாகனங்களின் விலை குறையுமா?

அரசாங்கம் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தாலும், அதிகரிக்கப்பட்ட வாகனங்களின் விலை குறையாது எனவும், வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் வாகன உற்பத்தித்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே  தெரிவித்தார்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது விலை உயரும் என்ற கோட்பாடு தற்போது வாகனங்களையும் பாதித்துள்ளது.

அதே நேரத்தில் ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வாகனங்களின் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும் இந்நிலையிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என சம்பத்  தெரிவித்துள்ளார்.

2020 மார்ச் முதல் வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியது.

எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாத நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ் மிற்றோர் (2022-02-02)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter