நீர் நுகர்வோர் தொடர்பாக நீர் வழங்கல் மூலம் எடுக்கப்பட்ட முடிவு
600,000 நீர் பாவனையாளர்களுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் கட்டணம் செலுத்தாத நுகர்வோர்களுடைய நீர் விநியோகம் மாவட்ட மட்டத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் (கட்டணங்கள்) ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்தார்.
கடந்த வருடம் 7,200 மில்லியன் ரூபாவை நுகர்வோர் செலுத்தத் தவறியுள்ளதாகவும், ஆறு மாதங்கள் அல்லது 2000 ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ள நுகர்வோருடைய நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் 2021 மார்ச்சில் 2,100 மில்லியன் ரூபாயாக இருந்த பில் தவணை டிசம்பரில் 7,200 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
மாதாந்திர குடிநீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாத பில்லில் 1.5 சதவீத தள்ளுபடியும், பணம் செலுத்த தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர பில்லில் 2.5 சதவீத தாமதமும் வசூலிக்கப்படும் என உதவி பொது மேலாளர்தெரிவித்துள்ளார்.
அருண 24/1/2022