IMF விவகாரம் – அரசில் முரண்பட்ட நிலைப்பாடு

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்குச் சர்வதேச நாணய நிதியத்தை(IMF) நாடுவதே ஒரே தீர்வாக அமையும் என்று பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

எனினும் அரசாங்கம் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாடு எதனையும் மேற்கொள்ளாதிருக்கிறது.

இந்த தருணத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நாட அவசியம் இல்லை என்றும், உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக தற்போது நாடு இருக்கும் நிலையிலிருந்து மீட்க முடியும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஆனால் நேற்று(23) கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து கூறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ், சர்வதேச நாணய நிதியத்தை நாடும் திட்டம் இன்னும் ஆலோசனை மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்துவ நாடு.

அதனால் எப்போது வேண்டுமானாலும் அதன் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேநேரம் அதற்காகச் சர்வதேச நாணய நிதியம் இடுகின்ற கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பிலும் அரசாங்கம் அவதானத்துடன் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிரு செய்திகள் –hirunews.lk– (2022-01-24)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter