மத்திய அதிவேகப் பாதையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்

கொழும்பிலிருந்து யாழ்நகருக்கு மூன்று மணி நேரத்தில் பயணம்

தம்புள்ளையிலிருந்து மரக்கறிகள், பழங்கள் என்பவற்றை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு 5 மணித்தியாலம் தேவைப்பட்டது. அப் பிரச்சினைக்குத் தீர்வாக 2012 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கு அமைய இந்த மத்திய அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மத்திய அதிவேகப் பாதை முழுமையாக பூர்த்தி அடைந்த பின்னர் அம்பாந்தோட்டை யில் இருந்து நான்கு மணித்தியாலத்தில் தம்புள்ளைக்கும், அம்பாந்தோட்டையில் இருந்து மூன்றரை மணித்தியாலங்களில் கண்டிக்கும் எவ்வித தடையும் இன்றி தொடர்ச்சியாக பயணிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். அத்துடன் வடக்கு அதிவேகப் பாதை இதனுடன் இணைக்கப் பட்டால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 3 மணித்தியாலங்களில் பயணிக்க முடியும் என்று பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் பிரேமசிறி இதுபற்றிக் கூறுகையில் “ஆரம்ப திட்டத்தின்படி ‘வடக்கு அதிவேக பாதை திட்டம்’ என பெயரிடப்பட்டு செயல்படுத்தப்படும் இத்திட்டம் இலங்கை அரசால் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிந்து கொள்ளப்பட்டு அதன்படி ‘மத்திய அதிவேக பாதை திட்டம்’ எனப் பெயரிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது” என்றார்.

தேசிய பெருந்தெருக்கள் திட்டத்துக்கு அமைய இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக மேல் மாகாணத்தின் கொழும்பு நகரத்திலிருந்து மத்திய மாகாணத்தின் தலைநகரான கண்டிக்கு மற்றும் புராதன முக்கியத்துவமும் பொருளாதார முக்கியத்துவமும் வாய்ந்த தம்புள்ளை நகருக்கு பயணிப்பதற்கான வசதியை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் இடையில் மத்திய நிலையங்களையுடைய பிரவேச பாதையின் ஊடாக கட்டுப்படுத்தப்படும் அதிவேக பாதையாகும். நான்கு கட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

1 கடவத்தையிலிருந்து மீரிகம வரை (37 கிலோமீட்டர்)

2 மீரிகமயிலிருந்து குருநாகல் வரை (40.91 கிலோமீட்டர்)

3 பொத்துஹரவிலிருந்து கலகெதர வரை (32.5 கிலோமீட்டர்)

4 குருநாகலில் இருந்து தம்புள்ளை வரை (60.3 கிலோமீட்டர்)

பொதுமக்களின் வசதிக்காக மற்றும் சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் இந்த அதிவேகப் பாதை அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெள்ளம் போன்ற நிலைமைகள் ஏற்படுவதை குறைக்கும் வகையில் இங்கு முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாத்தியவள ஆய்வுகளுக்கு மேலதிகமாக பிரதேச மக்களின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய அதிவேக பாதை கடவத்தை இடைமாயறும் மத்திய நிலையத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. கடவத்தையிலிருந்து ஆரம்பிக்கும் அதிவேகப் பாதையின் அடுத்த இடைமாறும் இடம் கம்பஹா ஆகும். அங்கிருந்து வெயாங்கொடைக்கும் மீரிகம தெற்கு இடைமாறும் இடத்திற்கும் பயணிக்க முடியும். தற்போது அதனை அமைக்கும் நடவடிக்கையும் வேகமாக நடைபெற்று வருகின்றது.

மீரிகம தொடக்கம் குருநாகல் வரையான இரண்டாவது கட்டம் ஜனவரி 15ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு137 பில்லியன் ரூபாவாகும். இந்த அதிவேக பாதையின் பகுதி நடவடிக்கைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று அதிவேகப் பாதையின் இரண்டாவது கட்ட திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் அனுர கெஹெல்ல தெரிவித்தார்.

“இந்த புதிய பாதையின் ஊடாக 25 நிமிடத் தில் குருநாகல் மீரிகம இடையே பயணிக்க முடியும். இப்பாதைகளை அமைப்பது தேசிய நிறுவனங்களாகும். அதன் காரணமாக நாட்டின் பணம் வெளிநாடுகளுக்கு செல்லாது. அத்துடன் கடன் வசதியையும் உள்ளூர் வங்கிகளே வழங்கியுள்ளன. எம் போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என திட்டப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மத்திய அதிவேக பாதையின் இரண்டாவது கட்டமாக மீரிகம வடக்கிலிருந்து, நாக்கலகமுவ (அலவ்வநாரம்மல பாதை) தம்பொக்க (குரு நாகல் கொழும்பு இலக்கம் 6 பாதை) போன்ற இடங்களில் உட்பிரவேசிக்கும் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தம்பொக்கவுக்கு முன்னதாக பொத்துஹரவில் கண்டியை நோக்கி செல்லும் மத்திய அதிவேகப் பாதை தெற்கிற்கு திரும்பிச் செல்லும்.

நாக்கலகமுவ இடைமாறும் இடத்திற்குப் பின்னர் வரும் தம்பொக்க இடைமாறும் இடத்திலிருந்து பொத்துஹரவிற்கு ஐந்து கிலோ மீட்டரும் மற்றும் குருநாகலுக்கு 4 கிலோமீட்டர் தூரமே உள்ளதால் தம்பொக்க இடைமாறும் நிலையம் பொத்துஹர, பொல்கஹவெல,கேகாலை மக்களுக்கு மிகவும் முக்கியமான இடமாகும்.

அதேபோன்று குருநாகல் கண்டி பாதையில் குருநாகல் ரயில் பாதைக்கு அண்மையில் (கெட்டுவான) குருநாகல் பிரவேசிக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குருநாகல் தம்புள்ளை பாதையில் (முத்தெட்டுகல உபரயில் நிலையத்துக்கு அருகே) மேலும் ஒரு பிரவேச பாதை அமைக்கப்பட்டுள்ளது. அது ‘யக்கஹபிட் டிய இடைமாறுமிடம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

நான்கு தடவழிப் பாதையாக அமைக்கப்பட்டுள்ள மீரிகம் குருநாகல் அதிவேக பாதையின் பகுதி தற்போதுள்ள அழகான அதிவேக பாதையாக அறியப்பட்டுள்ளது. அது அழகான காடுகளுக்கிடையே செல்லும் பாதை ஆகும். அது மிகவும் அழகான இயற்கை எழில் நிறைந் தது. மத்திய அதிவேக பாதையின் நான்காவது கட்டமான குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையான பாதையின் அடிப்படை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நான்காவது கட்டம் 58.6 கிலோ மீட்டர் ஆகும். 5 இடைமாறும் மத்திய நிலையங்கள் உள்ளன. அவை ரிதீகம், மெல்சிரிபுற, கலெவல மற்றும் தம்புள்ளையில் உள்ளன. தம்புள்ளையில் ஒரு பிரவேச பாதை ஏ9 பாதையில் தம்புள்ளை கண்டி பாதைக்கும், அடுத்த பிரவேச பாதை தம் புள்ளை ஹபரண பாதைக்கும் செல்லவுள்ளது. இதன் மொத்த செலவு 150 பில்லியன் ரூபாஆ கும்.

இத்திட்டத்தின் முக்கிய பகுதி மூன்றாவது கட்டம் ஆகும். அது பொத்துஹரவிலிருந்து கலகெதர வரையான பகுதியில் கண்டி வரை செல்லும் வாகனங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் 32.5 கிலோமீட்டர் தூரமான பாதையாகும். இந்தப் பாதை ரம்புக்கன கலகெதர இடைமாறும் மத்திய நிலையமாக அமைக்கப்படவுள்ளது. அதற்கான செலவு 159 பில்லியன் ரூபா என திட்டமிடப்பட்டிருந்தாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டால் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அதனை 25 பில்லியன் குறைத்து நிர்மாணிக்க ஒப்புதல் அளித்துள்ளமை நாட்டின் அதிர்ஷ்டமாகும்.

பொத்துஹரவிலிருந்து ஆரம்பமாகும் மூன்றாவது கட்டம் 300 அடி தொடக்கம் 1200 அடி வரை உயரமான மலைப்பாதை ஆகும். இதனை அமைக்க 3 சுரங்கங்களை அமைக்க வேண்டியுள்ளது. இதில் கொங்கிரீட் தூண்கள் மேல் அமைக்கப்படும் பாதைகளும் அடங்கும். இப்பாதையில் மேலே அமைக்கப்படும் வீதியின் மொத்த தூரம் 5.05 கிலோ மீட்டர் ஆகும்.

கொழும்பு, தம்புள்ளை, கண்டி ஆகிய இடங்களை இணைக்கும் இந்த மத்திய அதிவேக பாதை நாட்டிற்கு மிக முக்கியமானது. அதன் மூலம் கொழும்பிலிருந்து ஒன்றரை மணித்தியாலத்தில் தம்புள்ளைக்கும், கொழும்பிலிருந்து கண்டிக்கு ஒரு மணித்தியாலத்திலும் பயணிக்க முடியும். மத்திய அதிவேக பாதை எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு நீடிக்கப்படும் போது கொழும்பிலிருந்து மூன்று மணித்தியாலத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என பெருந் தெருக்கள் அமைச்சின் செயலாளரும் பொறியியலாளருமான ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்தார்.

“பாதைகள் அமைப்பது சாப்பிடவா?” என் அன்று கூறிய சிலர் இன்றும் தெற்கு அதிவேக பாதையில், கட்டுநாயக்க அதிவேக பாதையில் அதனை அமைக்க முயற்சி எடுத்த தற்போதைய அரசு மீது குறை கூறிக் கொண்டே பயணிப்பது கவலைக்குரிய விடயமாகும்.

நாட்டில் பொருளாதாரப் பிரச்சனை மற்றும் covid 19 தொற்று பரவியிருந்தாலும் மஹிந்த சிந்தனைக்கு அமைய தற்போதைய அரசு பாதை அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக பல பாதைகளை நிறைவு செய்துள்ளது. அது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், பெருந்தெருக்கள் அமைச்சர் போன்று பெருந்தெருக்கள் துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் மக்களின் நன்றிகள் உரித்தாகும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

நிஹால் பீ.அபேசிங்க | தமிழில்: வீ.ஆர்.வயலட்

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter