அதிகரிக்கும் நாட்டின் கடனும் நமது எதிர்காலமும்.

இலங்கையின்‌ தேர்தல்‌ காலம்‌ முடிந்துவிட்டது. கொரோனாவின்‌ செயற்பாடுகளும்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ வந்துவிட்டன. தற்போது மக்கள்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக இயல்புநிலைக்குத்‌ திரும்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்‌.

இப்போதுதான்‌, கடந்த 6 மாதகாலங்களில்‌ இலங்கையின்‌ பொருளாதார ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகள்‌ தொடர்பில்‌ பரபரப்பாகப்‌ பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்‌. கொரோனாக்‌ காலத்தில்‌ ஜனாதிபதியால்‌ எடுக்கப்பட்ட முடிவுகள்‌, பண அச்சிடல்‌, மத்திய வங்கியை அழுத்தத்துக்குள்ளாக்கி, முடிவுகளை எடுக்கவைத்தமை தொடர்பில்‌, உள்ள தீவிரத்தன்மை பற்றித்‌ தொடர்ச்சியாக எங்கள்‌ பத்திகளில்‌ நாம்‌ அறிவுறுத்தி வந்தநிலையில்‌, அதன்‌ உண்மை நிலையை தற்போதுதான்‌ மக்கள்‌ உணரத்‌ தொடங்கி இருக்கிறார்கள்‌.

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த 2015ஆம்‌ ஆண்டிலேயே, 2019-2021ஆம்‌ ஆண்டு காலப்பகுதிதான்‌ இலங்கை அதிகளவிலான பழைய கடன்களை, மீளச்‌ செலுத்த வேண்டிய காலமாக இருக்கிறது எனக்‌ கணிக்கப்பட்டி ருந்தது. இதன்‌ அடிப்படையில்தான்‌, மங்கள சமரவீர, நிதி அமைச்சராக வந்தபோது, 2020ஆம்‌ ஆண்டை அடிப்படையாகக்கொண்டு, நிதியியல்‌ திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தார்‌. ஆனால்‌, நல்லாட்சி உறவில்‌, ஏற்பட்ட விரிசல்‌ காரணமாக, அந்த நிதியியல்‌ இலக்குகள்‌ அடையப்படிருக்கவில்லை. இந்த நிலையில்தான்‌, 2019ஆம்‌ ஆண்டின்‌ மத்திய பகுதியிலிருந்து, தேர்தலுக்கான தீவிரம்‌ அதிகரித்திருந்தது. தேர்தலின்‌ காரணமாகவும்‌, 2020ஆம்‌ ஆண்டின்‌ ஆரம்பத்தில்‌, உலகளாவிய ரீதியில்‌ பாதிப்பை ஏற்படுத்தியிருந்த கொரோனா காரணமாகவும்‌ இந்த கடன்கள்‌ தொடர்பிலும்‌, நமது பொருளாதாரப்‌ பிரச்சினைகள்‌ தொடர்பிலும்‌ நாம்‌ சிந்திக்கத்‌ தவறியிருந்தோம்‌.

தற்போது, இயல்பு நிலைக்குக்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாகத்‌ திரும்புகின்ற நிலையில்‌, உண்மை உறைக்கத்‌ தொடங்கியிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கியினால்‌, வாராந்தம்‌ வெளியிடப்படும்‌ பொருளாதார அறிக்கையில்‌ கடந்த வாரம்‌ வெளியான அறிக்கையே மீண்டும்‌ கடன்கள்‌ தொடர்பிலான பேச்சுகள்‌ அதிகரிக்க, காரணமாகி இருக்கின்றன. காரணம்‌, 2020ஆம்‌ அண்டின்‌ முதல்‌ அரையாண்டுடன்‌ சேர்த்து, இலங்கை மத்திய வங்கி, செலுத்த வேண்டிய ஒட்டுமொத்தக்‌ கடனின்‌ தொகை 14,052 பில்லியனை எட்டியிருக்கிறது. இதுவொன்றும்‌ ஆச்சரியமல்ல. இதற்கு அடுத்து வருகின்ற செய்திகள்தான்‌ அச்சரியமானவை.

இந்த அறிக்கையிலேயே 2019ஆம்‌ அண்டின்‌ இறுதிவரை, மத்திய வங்கி செலுத்த வேண்டி௰, கடனின்‌ அளவு 12,013.5 பில்லியன்‌ ஆக இருந்ததென சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. அதன்‌ பிரகாரம்‌ பார்ப்பின்‌, கடந்த 6 மாதத்தில்‌, இலங்கையின்‌, புதிய அரசு அதிகரித்திருக்கும்‌ கடன்‌ தொகையின்‌ அளவு மாத்திரம்‌ 7,000 பில்லியன்‌ ரூபாய்களைத்‌ தாண்டுகிறது. வெறும்‌ 6 மாதத்தில்‌, கொரோனாவின்‌ போர்வையில்‌ நாம்‌ வாங்கியிருக்கும்‌ கடன்கள்‌, என அரசாங்கம்‌ கூறிக்கொண்டாலும்‌, இது நம்மவர்களின்‌ வினைத்திறனற்ற முகாமைத்துவத்துக்குச்‌ சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

நாட்டின்‌ வரலாற்றிலேயே முதல்‌ முறையாக கடந்த ஏப்ரல்‌ மாதத்தில்‌ கடனின்‌ எல்லையானது 14,000 பில்லியன்‌ ரூபாயைத்‌ தாண்டியிருந்தது. ஆனால்‌, கடந்த மே மாதத்தில்‌ செய்யப்பட்ட சில மீள்கொடுப்பனவுகள்‌ மூலமாக இந்தத்‌ தொகை 14, 895.9 பில்லியனாகக்‌ குறைக்கப்பட்டியிருந்தது. ஆனாலும்‌, அதற்கு அடுத்த மாதத்திலிருந்தே இலங்கை அரசு பழையபடி கடன்களை வாங்கி குவிக்க இந்த தொகையானது மீண்டும்‌ 74,000 பில்லியன்‌ ரூபாய்களை சாதாரணமாகத்‌ தாண்டியிருக்கிறது.

இந்த ஒட்டுமொத்த கடனின்‌ அளவை இன்னமும்‌ விரிவாகப்‌ பார்க்கவேண்டியது அவசியமானதாக இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த கடனானது, இரண்டுவகையான, முக்கியமான உபபிரிவுகளைக்‌ கொண்டதாக இருக்கிறது. னைறு உள்நாட்டுக்‌ கடன்‌ மற்றையது வெளிநாட்டுக்‌ கடன்‌. இதன்‌ பிரகாரம்‌, இலங்கையின்‌ உள்நாட்டுக்‌ கடன்‌ 2019ஆம்‌ அணடின்‌ இறுதியில்‌ 6, 629.1 பில்லியனாகவிருந்து, 2020ஆம்‌ ஆண்டின்‌ ஜூன்‌ மாதத்தின்‌ இறுதியில்‌ 7,530.8 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது.

அதுபோல, வெளிநாட்டுக்‌ கடன்‌ 2019ஆம்‌ ஆண்டின்‌ இறுதியில்‌, 6,402.4 பில்லியன்‌ ரூபாயிலிருந்து 2020ஆம்‌ ஆண்டின்‌ ஜூன்‌ மாதத்தின்‌ இறுதியில்‌ 6,521.4 பில்லியன்‌ ரூபாயாக மாற்றமடைந்து இருந்தது. உள்நாட்டுக்‌ கடனில்‌ மிகப்பெரும்‌ அளவு இலங்கை மத்திய வங்கியின்‌ திறைசேரி முறி, கடனாக இருக்கிறது. காரணம்‌, நாட்டுக்குத்‌ தேவையான நிதித்‌ தேவை ஏற்படுகின்றபோது, மத்திய வங்கி, திறைசேரி முறிகளை அச்சிட்டு வெளியிடும்‌. இதனை, உள்நாட்டு மற்றும்‌ வெளிநாட்டு முதலீட்டாளர்கள்‌ கொள்வனவு செய்வதன்‌ மூலமாக, அரசுக்கு தேவையான நிதியைப்‌ பெற்றுக்கொள்ள முடியும்‌. அனால்‌, கடந்த பல மாதங்களாக இலங்கை அரசுக்கு நிதித்‌ தேவை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால்‌, இந்தத்‌ தேவையைப்‌ பூர்த்தி செய்ய இலங்கை அரசு வெளியீடு செய்கின்ற திறைசேரி முறிகளைக்‌ கொள்வனவு செய்யப்‌ போதுமான முதலீட்டாளர்கள்‌ இல்லை.

எனவே, நாட்டில்‌ மிகப்பெரும்‌ நிதிப்‌ பற்றாக்குறை ஏற்பட்டு, கொரோனா காலத்தில்‌ மிகப்பெரும்‌ பிரச்சினைகள்‌ ஏற்பட வாய்ப்புகள்‌ அதிகமாயிருந்தன. இந்த நிலையைத்‌ தவிர்க்க, இலங்கை மத்திய வங்கி, அரசின்‌ திறைசேரி முறிகளைத்‌ தானே கொள்வனவு செய்யத்‌ தொடங்கியது. இங்கு உங்கள்‌ எல்லோருக்கும்‌ ஒரு கேள்வி வரலாம்‌. ஒரு நாட்டின்‌ மிக முக்கியமான வங்கியாக இருக்கின்ற, மத்திய வங்கியில்‌, இவ்வளவு நிதியிருக்குமாயின்‌, அதனை நேரடியாக அரசுக்கு வழங்கலாமே ? எதற்கு, திறைசேரி முறையை வாங்கிக்கொண்டு, கடன்‌ அடிப்படையில்‌ கொடுக்க வேண்டும்‌ 2 உண்மையில்‌, அதற்கான காரணம்‌ மிக எளிமையானது. உண்மையில்‌, இலங்கை மத்திய வங்கியிலும்‌ கூட, இந்தத்‌ திறைசேரி முறிகளை வாங்கவும்‌, ஐனாதிபதி அழுத்தம்‌ கொடுத்த, கடன்களை வழங்கவும்‌ நிதி இல்லை. அவர்கள்‌ என்ன செய்கிறார்கள்‌ என்றால்‌, ஒவ்வொரு முறையும்‌, கடன்‌ வழங்க, திறைசேரி முறிகளைக்‌ கொள்வனவு செய்ய, புதிய இலங்கை ரூபாய்களை பணமாக அச்சிடுகிறார்கள்‌. இதன்‌ மூலமாகவே, அரசின்‌ நிதி தேவைகளைப்‌ பூர்த்தி செய்கிறார்கள்‌. இதன்போது ஏற்படுகின்ற பாதகமானது. நேரடியாக சாதாரண பொது மக்களைப்‌ பாதிக்கும்‌ என்பதை நாம்‌ அறிவோமா ? அதையும்‌ எளிமையாகச்‌ சொல்லலாம்‌.

இலங்கை மத்திய வங்கி, இப்படி தொடர்ச்சியாக இலங்கை ரூபாயை அச்சிட்டுக்‌ கொண்டிருப்பின்‌, ஒரு கட்டத்தில்‌ இந்த இலங்கை ரூபாயின்‌ கொடுக்கல்‌ வாங்கல்‌ அளவு அதிகறநித்து, அதற்கான மதிப்புக்‌ குறையத்‌ தொடங்கும்‌. சர்வதேச அளவில்‌ இந்த நாணயத்தின்‌ பெறுமதி வீழ்ச்சி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பண வீக்கத்தின்‌ மூலமாக பொருள்கள்‌, சேவைகளின்‌ விலை அதிகரிப்பின்‌ மூலமாக நம்மையே வந்து தாக்கும்‌. இதனைத்‌ தவிர்க்க, இலங்கை மத்திய வங்கி, தாங்கள்‌ கொள்வனவு செய்து வைத்திருக்குத்‌ திறைசேரி முறிகளை எதிர்காலத்தில்‌ வெளிநாட்டு முதலீட்டாளர்கள்‌ கொள்வனவு செய்வார்கள்‌ என எதிர்பார்க்கிறார்கள்‌. இதன்மூலமாக, இலங்கை ரூபாய்க்கு சமமான வெளிநாட்டு நாணயங்களை இலங்கை அரசு கொண்டிருக்கும்‌. இதன்‌ விளைவாக, பணத்தின்‌ பெறுமதியை நிலையாக பேண முடியும்‌. ஆனால்‌, இதுவோர்‌ எதிர்பார்ப்பு மட்டுமே. உலகளாவிய ரீதியில்‌, கொரோனாவின்‌ தாக்கம்‌ உள்ளநிலையில்‌, பொருளாதார மந்தநிலையானது எதிர்வரும்‌ 2021ஆம்‌ ஆண்டின்‌ இறுதிவரை தொடர வாய்ப்புள்ளதாக அறிவிக்கபப்ட்டிருக்கிறது.

இதன்‌ விளைவாக, மிகப்பெரும்‌ வெளிநாட்டு முதலீடுகளை நாம்‌ இலங்கையில்‌ எதிர்பார்ப்பது மிகக்‌ கடினமான ஓன்றாக இருக்கிறது. அப்படியாயின்‌, நான்‌ மேலே சொன்னதுபோல நாட்டின்‌ தலைமைகள்‌ எடுத்த அலட்சியமான, தீர்மானங்களின்‌ விலையை நமது அன்றாட வாழ்வில்‌, ஒரு சுமையாக நாம்‌ தாங்க வேண்டியதாக இருக்கும்‌. அதற்கான அறிகுறிகள்‌ ஆரம்பித்தே இருக்கிறது. இந்த பத்தியை வாசித்துக்கொண்டிருக்கும்‌ நீங்கள்‌ இந்த வாரத்தில்‌, நீங்கள்‌, கொள்வனவு செய்த எத்தனை பொருள்கள்‌, சேவைகள்‌ ஆகியவற்றின்‌ விலையில்‌ ஏற்பட்டிருக்கும்‌ அதிகரிப்பை எண்ணிப்‌ பாருங்கள்‌. சில இடங்களில்‌ முட்டையின்‌ விலை 30 ரூபாயை எட்டியிருக்கிறது. அத்தியாவசிய பொருள்களுக்கான உச்ச விலை வரம்பு கடைப்பிடிக்கப்படாமல்‌ சீனியின்‌ விலை கிலோகிராம்‌ ஒன்றுக்கு 140 ரூபாயை தாண்டி சென்று கொண்டிருக்கிறது இவை அனைத்துமே ஓர்‌ ஆரம்ப அறிகுறிகளே.. !

இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து அரச தலைமைகள்‌ மிக விரைவாக செயற்படாமல்‌ விடின்‌, பொருளாதார ரீதியான பல்வேறு தாக்கங்களுக்கு நாம்‌ தயாராக இருக்கவேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எதிர்வரும்‌ வாரங்களில்‌ 20ஆவது திருத்த சட்டம்‌ மக்களின்‌ பேசுபொருளாத இருக்கப்போகின்ற நிலையில்‌, நமது பொருளாதார பிரச்சினைகள்‌ தொடர்பிலும்‌ மறந்து விடாமல்‌ இருப்பதே நன்று.

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter