மின் துண்டிப்பு நடைமுறையில் மாற்றம்

நாளை (24) ஒரு மணி நேரமும், நாளை மறுதினம் முதல் சுமார் 2 மணி நேரமும் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இன்று (23) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாளை (24) முதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருந்தாலும், அதனை மேலும் இரண்டு மணி நேரமாக நீட்டிக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்த செயன்முறையை தொடர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இலங்கை மின்சார சபை நிச்சயமாக 4 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிரு செய்திகள் –hirunews.lk– (2022-01-23 14:52:54)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter