எரிபொருள் நெருக்கடிகள் விமான சேவைகளை பாதிக்காது

எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸையோ அல்லது நாட்டிலுள்ள ஏனைய விமான சேவைகளையோ பாதிக்காது என, விமான போக்குவரத்து மற்றும் முதலீட்டு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் 32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதாகவும், எதிர்காலத்தில் எரிபொருள் கொள்வனவுக்கான ஆர்டர்கள் வழங்கப்பட்டதாகவும் சுறினார்.

-தமிழ் மிற்றோர் (2022-01-21)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter