மு.கா., அ.இ.ம.கா. அரச ஆதரவு அணி அமைச்சர் பசிலை சந்திக்க திட்டம்

அரசின் திட்­டங்­க­ளுக்கும், கொள்­கை­க­ளுக்கும், ஆத­ரவு வழங்­கி­வரும் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நிதி­ய­மைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷவை சந்­தித்து நாட்டின் நிகழ்­கால சமூக, பொரு­ளா­தார மற்றும் முஸ்லிம் சமூ­கத்தின் காணிப்­பி­ரச்­சி­னை­களை கலந்­து­ரை­யாடி தீர்­வு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளனர். இப்­பேச்­சு­வார்த்தை விரைவில் நடை­பெ­ற­வுள்­ளது.

இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு வின­வி­ய­போது ‘பேச்சு வார்த்­தைக்­காக நேரம் ஒதுக்­கித்­த­ரும்­படி நிதி­ய­மைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷ­விடம் கோரி­யுள்ளோம்.விரைவில் பேச்­சு­வார்த்தை இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புள்­ள­து’­எனத் தெரி­வித்தார்.

முஸ்லிம் சமூ­கத்தின் காணிப்­பி­ரச்­சினை உட்­பட பல முக்­கிய பிரச்­சி­னைகள் நீண்ட கால­மாக தீர்க்­கப்­ப­டா­துள்­ளது. அவற்­றுக்குத் தீர்வு பெற்­றுக்­கொ­டுப்­பது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எமது கட­மை­யாகும் என்றும் அவர் கூறினார்.

தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் கொண்ட வரப்­பட்ட 20 ஆம் திருத்த சட்­டத்­தையும், அதன்­பின்பு நிதி­ய­மைச்­ச­ரினால் முன்­வைக்­கப்­பட்ட 2022 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவு திட்­டத்­தையும் ஆத­ரித்து வாக்­க­ளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸைச் சேர்ந்த 7 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கூட்­டாக நிதி­ய­மைச்சர் பஷில் ராஜ­ப­க­ஷவைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்.

குறிப்­பிட்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எழு­வரும் ஏற்­க­னவே வரவு செலவு திட்ட இறு­தி­வாக்­கெ­டுப்­பிற்கு முன்­னைய தினம் நிதி­ய­மைச்­ச­ரு­டனும், பிர­த­ம­ரு­டனும், பேச்சு வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போதும் அவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்­சி­னை­களைக் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.

முஸ்லிம் சமூ­கம்சார் பிரச்­சி­னை­களை அர­சாங்­கத்­து­டனும், நிதி­ய­மைச்­ச­ரு­டனும் தொடர்ந்தும் கலந்­து­ரை­யாட வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.- Vidivelli

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2022-01-20

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter