ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சவூதியிடம் நிதி உதவி பெற தீர்மானம்

நாட்டில் நிலவும் நிதி நெருக்­கடி மற்றும் அமெ­ரிக்க டொலர் பற்­றாக்­குறை கார­ண­மாக அர­சாங்கம் ஸ்ரீ லங்கன் விமான நிறு­வ­னத்­துக்கு நிதி­யு­த­வி­யி­னையும் மற்றும் விமா­னங்­க­ளுக்குத் தேவை­யான எரி­பொ­ருளைப் பெற்றுக் கொள்­வ­தற்கு அமெ­ரிக்க டொலர்­க­ளையும் கட­னு­த­வி­யாக சவூதி அரே­பி­யாவின் அபி­வி­ருத்­திக்­கான நிதி­யத்­தி­ட­மி­ருந்து (SFD) பெற்றுக் கொள்ளத் தீர்­மா­னித்­துள்­ளது. இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுற்­றுலா மற்றும் விமான போக்­கு­வ­ரத்து அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க தெரி­வித்தார்.

சவூதி அபி­வி­ருத்­திக்­கான நிதியம் பொது­வாக சமூக மற்றும் உட்­கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கே நிதி­யு­தவி வழங்­கி­வ­ரு­கி­றது. என்­றாலும் விமான நிறு­வ­னத்தின் நிதி நிலைமை மற்றும் எரி­பொருள் கட்­ட­ணங்­களைச் செலுத்­து­வதில் உரு­வா­கி­யுள்ள இக்­கட்­டான நிலைமை கார­ண­மாக அர­சாங்கம் சவூதி அபி­வி­ருத்­திக்­கான நிதி­யத்­துடன் பேச்­சு­வார்த்தை நடாத்த தீர்­மா­தித்­த­தா­கவும் அவர் கூறினார்.

நிதி­யத்தின் பதிலைப் பொறுத்தே குறு­கிய கால அல்­லது நீண்­ட­கால கடன் வச­தியின் அடிப்­ப­டையில் நிதியைப் பெற்றுக் கொள்­வது பற்றி தீர்­மா­னிக்­கப்­படும்.எவ்­வ­ளவு தொகை கடன் பெற்­றுக்­கொள்­வது என்று இது­வரை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம், ஸ்ரீலங்கன் நிறு­வ­னத்­திடம் எதிர்­கால எரி­பொருள் கட்­ட­ணங்கள் ரூபா­வுக்குப் பதி­லாக அமெ­ரிக்க டொலரில் செலுத்­து­மாறு கோரி­ய­தை­ய­டுத்தே அமைச்சு இந்­ந­ட­வ­டிக்­கையில் இறங்­கி­யுள்­ளது.
ஸ்ரீலங்கன் விமான நிறு­வனம் இல­ங­டகை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு 330 பில்­லியன் ரூபா கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இத்­தொ­கையில் 30 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலுத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து எரி­பொருள் இறக்­கு­மதி செய்­வ­தற்கு அமெ­ரிக்க டொலர் தேவைப்படுகிறது. இந்த நெருக்கடியை தவிர்ப்பதற்காகவே எரிபொருளுக்கான கட்டணங்களை அமெரிக்க டொலரில் செலுத்துமாறு ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திடம் கோரியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதயகம்பன்பில தெரிவித்தார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2022-01-13

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Visitor Counters Flag Counter