பல அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள், பொறுப்புக்களை திருத்தி அதிவிசேட வர்த்தமானி

பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்களை திருத்தி, ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சின் கீழிருந்த மத்திய கலாநார நிதியம், புத்தசாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதிய சட்டம் என்பன புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சிலிருந்து நீக்கப்பட்டிருந்த அனைத்து நிறுவனங்கள் மற்றும் விசேட பொறுப்புக்கள், நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த 1991 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழுக்கள் சட்டம், கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டு சபையின் மேற்பார்வை நடவடிக்கை விசேட பொறுப்பாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனைத் தவிர மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளை சட்டம், மாகாண சபைத் தேர்தல் சட்டம், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Newsfirst.lk– (2022-01-11 07:05:30)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter