டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக தெரிந்திருத்தல் அவசியம்

கொரோனா வைரஸ் டிஜிட்டல் பாவனையை முன்னொருபோ துமில்லாத அளவிற்கு அதிகரிக்கச் செய்துள்ளது. டிஜிட்டல் வெளி, கணக்கீட்டுக் கருவிகள், சாதனங்கள், இணையம் ஆகியவை இன்று எமது அன்றாட வாழ்வின் ஓரங்கமாகிவிட்டதால் டிஜிட்டல் பாது காப்பு மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது . டிஜிட்டல் மற்றும் இணைய வழியானது பாதுகாப்பாக இருக்கும்போது, அது பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையையும் தருகிறது. நாம் தினந்தோறும் இணையவெளியில் உயிர் வாழ்கிறோம். தாக்குதல்கள் எப்போது வரும் என்று எமக்குத் தெரியாது. ஆனால் நாட்டில் பாதுகாக்கக் கூடிய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறை இன்னமும் இல்லை. சாதாரண மக்கள் உண்மையில் பெரும் ஆபத்தில் இருக்கிறார்கள், ஏனென்றால் வளங்களைக் கொண்டவர்கள் எமது டிஜிட்டல் வாழ்க் கையை மிகவும் கடினமாக்குவது எப்படி என்று அறிந்தவர்களாவர்.

மனித உரிமைகளின் அடிப்படையில் டிஜிட்டல் பாதுகாப்பைப் பற்றி சிந்திப்பது புஜிட்டல் பாதுகாப்பு அனைவரையும் எவ்வாறு பாதிக்கிறதென்பதையும் எத்தகைய கவலையை ஏற்படுத்துகிறது என் பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது. டிஜிட்டல் பாதுகாப்பு என்று வரும்போது சில தவறான புரிதல்கள் உள்ளதாக தோன்றுகிறது. உதாரணமாக தேசிய பாதுகாப்பை சிறப்பாகப் பாதுகாக்க அரசாங் கத்தை அனுமதிக்கும் என்ற நம்பிக்கையுடன், தங்கள் தனியுரிமை யில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை ஏற்பதற்கு மக்கள் பெரும்பாலும் தயாராக இருக்கவேண்டியுள்ளது . சிலர் தங்கள் இணைய வழியானது தனியுரிமை மற்றும் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய மறைமுகமான அல்லது சந்தேகத்திற்கிடமான நடத்தையில் ஈடுபடக்கூடும் என்று கரு துகின்றனர். டிஜிட்டல் பாதுகாப்பை அதிகரிக்க விரும்புவோர் பொது வான அச்சுறுத்தல்களைப் பற்றி அறிந்துகொள்வதுடன், அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதை அறிந்து கொள்ளவும் ஆட்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.

ஊடகங்களும் மென்பொருளும் எப்பொழுதும் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், பல்வேறு வகையான நுண்ணறிவுக ளுக்குள் ஏற்படும் புதிய மேம்பாடுகள் குறித்தும் நாம் எப்போதும் கிற் றைப்படுத்திக்கொள்ள வேண்டும், கருவிகளை பாதுகாக்க வேண்டும், உதாரணமாக, தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் விடுகளை சுத்தம் செய்வதில் அக்கறை செலுத்துவது போன்று, டிஜிட்டல் பாது காப்பு தொடர்பான நடைமுறைகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இணைய வழியில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் ஒன்று கபினிங் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், இது சட்டப்பூர்வ நிறுவனங்களில் இருந்து அனுப்பப்பட்டதைப் போன்று போலி மின்னஞ்சல்களைக் குறிக்கிறது. இணைய வழியில் நாம் எதிர் கொள்ளும் மற்றொரு பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல், எமது கணக்குகளை ஊடுருவி ஹேக்கிங் செய்தல், தாக்குவதாகும். நாங் கள் எதைச் செய்தாலும், வழக்கமாக பெரும்பாலும் எமது தனிப்பட்ட கணக்குகளைப் பயன்படுத்துகிறோம்.மேலும் அவை எங்களை இணை ய வழியில் பெறுவதற்கு ஊடுருவி தாக்குதல் செய்யப்படுகின்றன. இணைய வழியில் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் ஒன்று இணைய வழி ஊடகம் எவ்வாறு செயற்படுகிறது என்பது பற்றிய பொதுவான அறிவு இல்லாதமையாகும்,

அதேவேளை பொதுவான கண்காணிப்பு அனைவரையும் பாதிக்கிறது. தங்களிடம் மறைக்க எதுவும் இல்லையெனவும் அத னால் டிஜிட்டல் பாதுகாப்பு தேவையில்லை என்றும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்கும் ஆளொருவர் உண்மையில் தவறான தகவல் கொண்டவர். ஒவ்வொருவரும் வெளி யிரும் அனைத்து தகவல்களும் அதை அடைய வழி உள்ள எவருக்கும் கிடைக்கும். இணையத்திற்கு முன், யாராவது ஒருவரின் பிறந்த நாள், வேலை செய்யுமிடம் அல்லது திருமணம் தொடர்பாக அறிய விரும் பினால், அவர்கள் நேரடியாக அல்லது வேறு யாரிடமாவது கேட்க வேண்டும்.உங்கள் தகவல் தொடர்புகளை யாராவது கண்காணிக்க விரும்பினால், அவர்கள் உங்கள் தொலைபேசியை பார்க்க வேண்டும் அல்லது உங்கள் தபாலை திறக்க வேண்டும். யாராவது உங்கள் பணத்தை எடுக்க விரும்பினால், அவர்கள் உங்கள் பணப்பையை திருட வேண்டும். இப்போது இவை அனைத்தையும் இணைய வழியில் அணுகலாம். சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் இணைய வழி வங்கி ஆகியவை பயனுள்ள நவீன வசதிகள். துரதிர்ஷ்டவசமாக, அவை புதிய அச்சுறுத்தல்களுக்கும் எம்மை வெளிப்படுத்துகின்றன. இன்றைய இணையம் எம்மைப் பற்றிய மேலும் மேலும் தகவல்களைக் கோரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது,

நிறுவனங்கள் தகவலைச் சேகரிக்கின்றன. அதனால் அவர்கள் ஆட்களுக்கு தனிப் பயனாக்கப்பட்ட விளம்பரங்களை விற்க முடியும். அரசாங்கங்கள் கண்காணிப்பை மேற்கொள்கின்றன. அதனால் அவர் கள் முழு மக்களின் செயற்பாடுகளையும் கண்காணிக்க முடியும். சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட தகவலைத் தேடுகிறார்கள். அதனால் அவர் கள் உங்களைக் கொள்ளையடிக்கலாம் அல்லது மிரட்டி பணம் பறிக் கலாம். சில சமயங்களில் இந்தத் தகவல் சேகரிப்பின் அர்த்தம் என்ன என்று யோசிக்காமல் ஒப்புக்கொள்கிறோம். ஏனைய நேரங்களில் நாம் சம்மதிக்கவே மாட்டோம். ஒவ்வொருவரும் இணைய வழியில் தங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க முடியும். ஆனால் இது தானாகவே நடக்காது, எமது தனியுரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய புஜிட்டல் பாதுகாப்பைப் பற்றி சிறப்பான அறிவை கொண்டிருப்பது அவசியம் .

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter