உணவு, உடை, கலாசாரம் அனைத்திலும் ஒரே சட்டம்! -ஞானசார தேரர்

நாடு ஒன்றாயின் அதன் சட்டங்களும் ஒன்றாகவே இருக்க வேண்டும், பழங்குடிமக்கள் பின்பற்றிய சட்டங்கள் கூட இன்னும் நாட்டில் பின்பற்றப்படுகின்றன, தற்போதைய சட்டங்கள் ஒருவகை அச்சுறுத்தலானவைகளாக உள்ளன. என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலபொடஅத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது-

ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதன் நோக்கையடைய சகல மாகாணங்களிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கலந்துரையாடல்கள் முடிவடைந்து விட்டன. தற்போது மத்திய மாகாணத்தில் ஆரம்பித்துள்ளோம்.

இரண்டு நாடாக பிளவுபட்ட எமது நாடு 2009ல் பிரபாரனின் மறைவுடன் ஒரு நாடானது. ஆனால், நாட்டில் மீண்டும் அனைத்து வகையிலும் சமூக பிரிவினைகளுக்கு வழியமைக்கப்பட்டுள்ளது.

உணவு, உடை, கலாசாரம், பண்பாடு பழக்கவழக்கம் என்று அனைத்தும் இன்று சமூக ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஒரு சிலரிடம் காணப்பட்ட சில வழமைகள் கூட இன்று சட்மாக்கப்பட்டுள்ளன. இதனால்தான் யாவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை யாரிடம் முறையிடுவது என்று தெரியாதிருந்தனர்.

மேலும் இந்நாட்டில் எதனை எடுத்தாலும் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களும் குற்றம்சாட்டுபவர்களும் இருக்கத்தான் செய்வர். அதனை பொருட்படுத்தக் கூடாது என்றார்.

(வத்துகாமம் நிருபர்) மெட்ரோ நியூஸ் 28/12/2021

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter