சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்று கடன் கோர முடியாத நிலை இல்லையெனவும், அவ்வாறு கடனை பெற வேண்டுமாயின் அரச சேவையை குறைக்கும் வகையில் நிபந்தனையுடனேயே கடன் வழங்கப்படுவதாகவும் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவ தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் கோரிக்கை நாட்டிலுள்ள 1.5 மில்லியன் அரச ஊழியர்களைக் குறைக்க வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட நேரத்தில் அரச சேவையை குறைக்க முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
-தமிழன்.lk– (2021-12-23 13:30:21)