D.F சிறுவர் பராமரிப்பு நிலையம் வண்ணிமுந்தல் கற்பிட்டி முஸ்லிம் அநாதை நிலையம்
புதிய மாணவர் அனுமதி-2022
குவைத் நாட்டில் உள்ள அல்-நஜாத் நிறுவனத்தினூடாக கொழும்பு தெஹிவளையில் இயங்கி வரும் அந்-நூர் நிறுவனத்தின் அனுசரனையுடன் கற்பிட்டி, வண்ணிமுந்தல் கிராமத்தில் அமைந்துள்ள DF சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு தந்தையை இழந்த 6 முதல் 14 வயது வரையிலான ஆண் பிள்ளைகளை இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அல்-நஜாத் நிறுவனம் :
ஏழைகள் மற்றும் அநாதைகளுக்கு பலவிதமான உதவிகளை செய்துவருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்
பல ஆண்டுகளாக இலங்கையினுள் பல ஊர்களிளும், பல கிராமங்களிளும் உள்ள ஏழைகள் மற்றும் அநாதைகளுக்கு பலவிதமான உதவிகளை செய்துவருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்
இதன் அடுத்த கட்டமாக புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் வண்ணிமுந்தல் கிராமத்தில் முஸ்லீம் அநாதை சிறார்களுக்கான ஒரு அநாதை இல்லத்தை அமைத்துவருகின்றது. இவ் அநாதை இல்லத்திற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந் நிலையத்தில் அனுமதி பெறும் சிறுவர்களுக்கு கல்வி, உணவு, உடை, மருத்துவப் பராமரிப்பு, தங்குமிட மற்றும் சகல வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்.
கல்வி வசதிகள் :
தரம் 1 முதல் க.பொ.த உயர்தர வகுப்பு வரை அரசாங்க பாடதிட்டத்திற்கமைய சிங்களம், ஆங்கிலம், தமிழ் உள்ளடங்களாக சகல பாடதிட்டங்களும் கற்பிக்கப்படுவதுடன் அல்-குர்ஆன், மார்க கல்வி, கணனி, தொழில் பயிற்சிகள் மற்றும் நீச்சல் பயிற்சிகளும் வழங்கப்படும்.
விதிமுறைகள் :
- தந்தை மரணித்த ஆண் சிறாராக இருத்தல்.
6 முதல் 14 வயதுக்குற்பட்டவராக இருத்தல்,
HEAD OFFICE
Al Noor Charity Association
43, Sunethradevi-Road, Kohuwala
0773840777
0753703380
aytam.alnoorsaylan@gmail.com
www.alnoorsylan.com