பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் என்ற முறையில் அல்லாமல், ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் செயலணி ஒன்றின் தலைவர் என்ற முறையில் ஞானசார தேரர் அண்மையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்முனை, காத்தான்குடி போன்ற பிரதேசங்களுக்கு ஓர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது கணிசமான அளவிலான முஸ்லிம்கள் விரும்பி முன்வந்து, அவருக்கு வரவேற்பளித்திருந்ததுடன், அவருடன் சுமுகமான விதத்தில் உரையாடல்களையும் நடத்தியிருந்தார்கள்.
இப்பொழுது அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதுடன், அந்தச் சந்திப்புக்களை நெறிப்படுத்திய ஒரு சில சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது சமூக ஊடகங்களில் கடுமையான வசைமாரிகளும் பொழியப்பட்டு வருகின்றன.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி தொடர்பாக இரண்டாவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த 30 ஆம் திகதி 15 இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் என்பவற்றையடுத்து தனது செயலணியின் பணிப்பாணை (Mandate) கடுமையாக வரையறுக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியிலும் கூட, ஞானசார தேரர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனக்கு பெருமளவுக்கு அதிகாரங்கள் இருந்து வருவதான ஒரு தோரணையில் நடந்து கொள்கிறார். இந்தப் புதிய நியமனம், அது எடுத்து வந்திருக்கும் அங்கீகாரம் மற்றும் காவலர்கள் புடைசூழ மேற்கொள்ளப்படும் பயணங்கள் என்பன அவரிடம் ஒரு விதமான பரவச உணர்வையும், புதுத் தெம்பையும் எடுத்து வந்திருப்பது போல் தெரிகிறது. அதற்கு தகுந்தாற் போல அவருடைய உடல் மொழியிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
காத்தான்குடியில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து அவர் தனது இயல்புக்கு மாறான விதத்தில் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். இந்தப் பயணங்களின் பின்னர் அவரிடம் சிறு அளவிலான ஒரு மனமாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி இல்லாவிட்டாலும் கூட, ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி முன்வைக்கப் போகும் பரிந்துரைகள் குறித்து எவரும் அநாவசியமாக பீதியடைய வேண்டிய அவசியமில்லை.
2012 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற ஞானசார தேரரின் திடீர் எழுச்சியும், பரந்த சிங்கள பௌத்த சமூகத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பும் ஒரு சூனியத்தில் நிகழவில்லை என்பதை முதலில் நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ‘அத்தகைய ஒரு ஆபத்தானவரின்’ வருகைக்காக தென்னிலங்கை சிங்கள சமூகம் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே அது நிகழ்ந்தது. குறிப்பாக, 1990 தொடக்கம் இலங்கை இஸ்லாமிய சமூகத்தில் படிப்படியாக ஏற்பட்டு வந்த மாற்றங்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் என்பன ஞானசார தேரர் போன்ற ஒருவரின் எழுச்சிக்கு உசிதமான ஒரு சூழ்நிலையை சிங்களப் பெருநிலத்தில் உருவாக்கியிருந்தன.
சுதந்திரத்திற்குப் பின்னர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் விளிம்பு நிலையில் நின்று செயற்பட்டு வந்த தீவிர சிங்கள இனவாதிகளை அந்த மாற்றங்களே மைய நீரோட்ட அரசியல் சமூகத்திற்குள் எடுத்து வந்திருந்தன என்ற விடயத்தை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.
2012 / 2013 காலப் பிரிவில் சிங்கள ஊடகங்களின் பக்கபலத்துடன் பொதுபல சேனா இயக்கம் முன்னெடுத்த தீவிரமான ஹலால் எதிர்ப்புப் பிரச்சாரம் எங்கு போய் முடிந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நாட்டு நிலைமையை கவனத்தில் எடுக்காமல் ஒரு சில தரப்பினர் கண்மூடித்தனமாக எடுத்திருந்த தீவிர நிலைப்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் சிறுமைப்படுத்தப்பட்ட தருணமாக அது இருந்து வந்தது.
அடுத்து வந்த எட்டு ஒன்பது ஆண்டுகளில் நிகழ்ந்தவை அனைத்தும் வரலாறு.
ஞானசார தேரர் தொடர்பாக கட்டமைக்கப்பட்டிருக்கும் ‘முஸ்லிம்களின் மிக மோசமான எதிரி’ என்ற பிம்பத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், ஞானசார தேரரும் புதிதாக களமிறங்கியிருக்கும் ஒரு சில தீவிர அரசியல் பிக்குகளும் இன்றைய இலங்கையின் சிக்கலான இனத்துவ அரசியலில் உதாசீனம் செய்ய முடியாத சக்திகளாக எழுச்சியடைந்திருக்கின்றார்கள்.
மறுபுறத்தில், ஒரு சராசரி மத வெறியரிலிருந்து ஞானசார தேரர் எவ்வாறு வேறுபடுகிறார் என்பதனை துல்லியமாக அறிந்து கொள்வது, அவருடைய உளவியலை புரிந்து கொண்டு, அதற்கேற்றாப் போல அவருடன் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு உதவ முடியும்.
தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்தில் மதம் ஒரு போதும் ஒர் அங்கமாக இருந்து வரவில்லை. மாறாக, சில கட்டங்களில் பொதுவான மதச் சடங்குகள் சிங்கள – தமிழ் சமூகங்களை இணைக்கும் ஒரு பொது நிகழ்வாக சரடாக இருந்து வருகின்றது என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. போர் உக்கிரமாக இடம்பெற்ற கால கட்டத்திலும் கூட, சிங்கள இனவாத/ தேசியவாத தரப்புக்கள் மற்றும் சிங்கள ஊடகங்கள் என்பன ஒரு சில சந்தர்ப்பங்களில் கத்தோலிக்கச் திருச்சபை மீதும், வடபுலத்தில் களச் செயற்பாட்டாளர்களாக இருந்து வந்த ஒரு சில முன்னணி அருட் தந்தையர்கள் மீதும் புலி ஆதரவு முத்திரையை குத்தினார்களேயொழிய, இந்து மதம் என்ற ஸ்தாபனத்தை அத்தரப்புக்கள் ஒரு போதும் விமர்சனத்திற்கோ அல்லது கண்டனத்திற்கோ உட்படுத்தவில்லை.
மாறாக, இலங்கையில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு முழுக்க முழுக்க மதம் சார்ந்த விதத்திலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த வெறுப்புப் பிரச்சாரத்தில் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து, நீக்க வேண்டியவற்றை நீக்கி அதற்கு ஒரு புதிய வடிவத்தை உருவாக்கிக் கொடுத்தவர் ஞானசார தேரர்.
சரியாகச் சொல்லப் போனால், அநகாரிக தர்மபால போன்ற கடும் தேசியவாதிகளின் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களை அடுத்து, கிட்டத்தட்ட 100 ஆண்டு காலமாக சிங்கள மக்களின் பொதுப் புத்தியில் முஸ்லிம்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டிருந்த சித்திரங்கள் “ஈவிரக்கமற்ற வியாபாரிகள்; ஏமாற்றுப் பேர்வழிகள்; வகைதொகை இல்லாமல் பிள்ளைகளை பெற்றுக் குவிப்பவர்கள்” என்ற விதத்திலேயே இருந்து வந்தன.
அந்தச் சித்திரங்களை கலைத்துப் போட்ட ஞானசார தேரர், முஸ்லிம்களை அந்தக் கண்ணோட்டத்தில் நோக்க வேண்டியதில்லை என்று சொன்னார்.
‘முஸ்லிம்கள் வியாபாரத்தில் கெட்டிக்காரர்களாக இருந்து வந்தால் அதில் உனக்கு என்ன பிரச்சினை? நீயும் அவர்களுடன் போட்டி போட்டு வியாபாரம் செய்து, முன்னேறு’ என்று அவர் சிங்கள மக்களைப் பார்த்துச் சொல்கிறார். அதே கையோடு “முடியுமான அளவுக்கு முஸ்லிம்களுக்கு இணையான வேகத்தில் நீயும் அதிகம் பிள்ளைகளைப் பெற்று, சிங்கள இனத்தைப் பெருக்கு” என்ற அறிவுரையை வழங்குகிறார்.
இலங்கைக்கு இஸ்லாம் விடுத்து வருவதாக கருதப்படும் அச்சுறுத்தலை முற்றிலும் வேறுபட்ட ஒரு கண்ணோட்டத்தில் அவர் பார்க்கிறார். ‘பாரம்பரிய முஸ்லிம்கள்’ என்ற பெயரில் அவர் அழைக்கும் முஸ்லிம்களின் ஒரு தரப்பினரை சிங்கள சமூகம் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார்.
சிங்களவர்களைப் போலவே, பாரம்பரிய முஸ்லிம்களும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பேராபத்தை எதிர்கொண்டிருக்கின்றார்கள் என்று வாதிடுகிறார். அத்தோடு நின்றுவிடாது, அந்தப் பாரம்பரிய முஸ்லிம்களின் வேண்டுகோள்களையடுத்தே தான் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதாகவும் சொல்கிறார்.
‘நாங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பாடாதிருந்தால் அடுத்து வரும் ஆண்டுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பூதம் முழு நாட்டையும் விழுங்கிக் கொள்ள முடியும்’ என்பது அவருடைய பரப்புரைகளின் சாராம்சம். அதன் ஊடாகவே அவர் சிங்கள மக்களை தொடர்ந்து பயத்திலும், பீதியிலும் வைத்திருக்க முயன்று வருகிறார்.
அவரையும் அவருடைய சக பயணிகளையும் நிராகரிக்கும் விதத்திலும், அவர்களுடைய இரகசிய அஜென்டாக்களை அம்பலப்படுத்தும் விதத்திலும் சிங்கள தரப்பில் சமூக ஊடகங்களில் பெருமளவுக்கு பரப்புரைகள் முன்வைக்கப்பட்டு வருவது உண்மை. ஆனால், அவர்களும் கூட, இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து ஞானசார தேரர் முன்வைத்து வரும் கருத்துக்களை மறுத்துரைக்க தயங்குகிறார்கள்.
(அண்மைய இரண்டு உதாரணங்கள் க்ரைஸ்ட் சேர்ச் மற்றும் சியால்கோட் சம்பவங்கள்) ஊடக மொழியில் அவை ‘Isolated Incidents’ என்று வர்ணிக்கப்படுபவை. அதாவது, விரிவான திட்டங்களுடன் செயற்படும் இரகசிய தீவிரவாத இயக்கமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலாக / கொலையாக அல்லாது, தனித்து செயற்படும் ஒரு நபரால் / நபர்களினால் தன்னெழுச்சியாக நிகழ்த்தப்படும் சம்பவங்களை குறிப்பதற்கு அச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், இலங்கையில் இவற்றுக்கு எதிர்வினையாற்றிய சிங்களத் தரப்புக்கள் அனைத்துமே இத்தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பயங்கரவாதச் செயல்களாக சித்தரிப்பதற்கு முயன்றுள்ளன என்பதனை இங்கு சுட்டிக் காட்டுதல் வேண்டும்.
கடும் காழ்ப்புணர்ச்சிகளுடன் செயற்பட்டு வரும் ஒரு சராசரி மத வெறியர் என முத்திரை குத்தி, ஞானசார தேரரை முற்றிலும் நிராகரித்து விட முடியாது. அதற்குப் பதிலாக, அவருடன் ஓர் உரையாடலை நடத்த வேண்டியிருப்பதுடன், அந்த உரையாடலின் போது அவரிடம் முன்வைக்க வேண்டிய வாதங்களை மிகவும் கவனமான விதத்தில் தொகுத்துக் கொள்ளவும் வேண்டும்.
இந்தப் பின்புலத்தில், ஞானசார தேரரின் கிழக்கு மாகாண விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரை முழுவதுமாக பகிஷ்கரிப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு ஏதாவது நல்லது நடக்கக்கூடிய வாய்ப்பு இருந்து வருகின்றதா என்ற கோணத்தில் தான் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். அப்படிப் பார்த்தால், அவரைச் சந்திப்பதன் மூலம் சொல்லிக் கொள்ளும் படியாக ஏதேனும் பிரயோசனங்கள் ஏற்படாவிட்டாலும், திட்டமிட்டு அவருடைய விஜயத்தை பகிஷ்கரிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அதிகமாக இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை (ஞானசார தேரர் போன்ற ஆளுமைப் பண்புகளை கொண்டிருப்பவர்கள் காரியங்களை கெடுப்பதில் – ஒரு எதிர்மறை பாத்திரத்தை (Negative Role) வகிப்பதில் – வல்லவர்கள்).
கல்முனையிலும், காத்தான்குடியிலும் இந்தச் சந்திப்புக்களை நெறிப்படுத்தியவர்கள் அநேகமாக இத்தகைய ஒரு கண்ணோட்டத்திலேயே சிந்தித்திருக்க முடியும்.
ஞானசார தேரருடனான இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கும் அரசியல் பின்புலத்தையும் இங்கு நாங்கள் கவனத்தில் வேண்டும். முஸ்லிம் அரசியல் கட்சிகள் முற்றிலும் முடக்கப்பட்டு, அவற்றின் பேரம் பேசும் சக்தி பூச்சிய நிலையில் இருந்து வரும் ஒரு சூழ்நிலையிலேயே இந்த நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, ஞானசார தேரர் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்துடனும், அவர் முன்வைக்கும் கருத்தியலுடனும் (விரும்பியோ, விரும்பாமலோ) ஓர் உரையாடலை நடத்த வேண்டிய தேவை கிழக்கு முஸ்லிம்களுக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. (அதே போல தென்னிலங்கை முஸ்லிம்களும் தமது தரப்புக்களை முன்வைத்து, உத்தியோகபூர்வமாக அவருடைய செயலணியுடன் உரையாடுவது அவசியம்).
குறிப்பாக, உயிர்த் ஞாயிறுத் தாக்குதல்களை அடுத்து நிலைமை தீவிரமடைந்து, இஸ்லாமிய எதிர்ப்பு ஒரு பகிரங்க அச்சுறுத்தலாக மாறிய பொழுது, இஸ்லாமிய இயக்கங்கள் முழுவதும் ஆன்மிகத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பத் தொடங்கின. ‘இந்தச் சோதனைகளிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரேயொரு வழி மேலும் மேலும் அமல்களை செய்வது தான்’ என்று வெள்ளிக்கிழமை பிரசங்கங்களில் சொல்லத் தொடங்கினார்கள். (அதில் எந்தத் தவறுமில்லை). ஆனால், அதே நேரத்தில், லௌகீக யதார்த்தங்களை இந்த மண்ணில் நின்று தான் எதிர்கொள்ள வேண்டும்; அதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும்; சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டி, அதற்கு தயார்படுத்த வேண்டும்; ஆனால், அத்தகைய காரியங்கள் எவையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்றிருப்பதாக தெரியவில்லை.
ராஜபக்சாக்களையும் ஞானசார தேரர் போன்றவர்களையும் பழித்துரைத்து, அவர்கள் மீது கடுமையான சாபங்களை இடுவதில் எல்லோரும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுந்தமானமான விதத்தில் ஐந்து முஸ்லிம்களை சந்தித்தால் அவர்களில் நான்கு பேர் அந்த மனநிலையில் இருந்து வருவதையே பார்க்க முடிகிறது. ஆனால், இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எவரிடமும் சரியான ஒரு மாற்றுவழியோ, மாற்றுத் திட்டமோ இருந்து வருவதாகத் தெரியவில்லை. அது குறித்து எவரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
ஞானசார தேரர் போன்றவர்களுடன் உரையாட வேண்டிய அவசியத்தை எடுத்து வரும் மற்றொரு காரணி இலங்கையின் இன்றைய அரசியல் கள யதார்த்தம்; முஸ்லிம்கள் இந்த நெருக்கடியை வெறுமனே ‘கொடிய ராஜபக்ச ஆட்சி எதிர் சிறுபான்மையினர்’ என்ற இருமைக்குள் சுருக்கி, நோக்க முடியாது என்ற யதார்த்தம்; 2024 / 2025 தேர்தல்களை அடுத்து ராஜபக்சாகள் இல்லாத ஓர் ஆட்சி வந்தாலும் கூட, இந்த நெருக்கடி தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற யதார்த்தம்; ராஜபக்சாக்கள் இல்லாத ஓர் அரசாங்கத்திற்கூடாக கரையோர அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட தமது எந்தவொரு முதன்மையான கோரிக்கையையும் கிழக்கு முஸ்லிம்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது போகும் என்ற யதார்த்தம்.
அதிகம் பேர் நினைத்துக் கொண்டிருக்கும் விதத்தில், ராஜபக்ச எதிர்ப்புப் புள்ளடியினால் மட்டும் எல்லாப் பிரச்சினைகளும் ஒரேயடியாக தீர்ந்து விடப் போவதில்லை. கோத்தாபய ராஜபக்சவினால் தீர்த்து வைக்க முடியாத முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும், சஜித் பிரேமதாசவோ அல்லது வேறு ஒரு சிங்களத் தலைவரோ தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
எல்லோரும் இனவாதியாகவும், மதவாதியாகவும் சிந்திக்கப் பழகியிருக்கும் ஒரு சமுதாயத்தில் ஒருவர் மற்றவரை நோக்கி விரல் நீட்டுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. சாதாரண மக்களுக்கு மத்தியில் ஒரு விதமான மதவாத சிந்தனையை, பல்லின, பல் கலாசார நாடு ஒன்றுக்கு எவ்விதத்திலும் பொருத்தமில்லாத ஒரு சிந்தனையை ஊட்டி வளர்த்து, ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரு மாபெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டவர்கள் இப்பொழுது ஒதுங்கி நின்று ‘பிரச்சினை இல்லை, அதிகம் அதிகம் அமல்களை செய்து இந்தச் சோதனைகளிலிருந்து மீண்டு வருவோம்’ என்கிறார்கள்.
ஆனால், கல்முனையிலும், காத்தான்குடியிலும் ஞானசார தேரருடனான சந்திப்புக்களை ஒருங்கிணைப்புச் செய்வதில் பங்கேற்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் (ஆன்மிக ரீதியிலான அம்சங்களுடன் சேர்த்து) லௌகீக ரீதியிலான சில பிரச்சினைகள் குறித்தும் சிந்தித்திருப்பதாக தெரிகிறது. அடுத்து வரவிருக்கும் தலைமுறையினர் குறித்து கரிசனை கொண்டு, சமூக இயங்கியலை துல்லியமாக அடையாளம் கண்டு, அதற்கு எதிர்வினையாற்றியிருப்பதாகத் தெரிகிறது.
நிதான புத்தியையும், ‘பொது மந்தைக்கு’ வெளியில் நின்று, எவரும் பார்க்காத ஒரு கோணத்தில் பிரச்சினைகளை அணுகும் திறனையும் கொண்டிருக்கும் அத்தகைய சமூக செயற்பாட்டாளர்கள் மேலும் மேலும் எமக்குத் தேவை.

ஒருங்கிணைப்புச் செய்வதில் பங்கேற்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் (ஆன்மிக ரீதியிலான அம்சங்களுடன் சேர்த்து) லௌகீக ரீதியிலான சில பிரச்சினைகள் குறித்தும் சிந்தித்திருப்பதாக தெரிகிறது. அடுத்து வரவிருக்கும் தலைமுறையினர் குறித்து கரிசனை கொண்டு, சமூக இயங்கியலை துல்லியமாக அடையாளம் கண்டு, அதற்கு எதிர்வினையாற்றியிருப்பதாகத் தெரிகிறது.
நிதான புத்தியையும், ‘பொது மந்தைக்கு’ வெளியில் நின்று, எவரும் பார்க்காத ஒரு கோணத்தில் பிரச்சினைகளை அணுகும் திறனையும் கொண்டிருக்கும் அத்தகைய சமூக செயற்பாட்டாளர்கள் மேலும் மேலும் எமக்குத் தேவை.-ராஜபக்சாக்களையும் ஞானசார தேரர் போன்றவர்களையும் பழித்துரைத்து, அவர்கள் மீது கடுமையான சாபங்களை இடுவதில் எல்லோரும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுந்தமானமான விதத்தில் ஐந்து முஸ்லிம்களை சந்தித்தால் அவர்களில் நான்கு பேர் அந்த மனநிலையில் இருந்து வருவதையே பார்க்க முடிகிறது. ஆனால், இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எவரிடமும் சரியான ஒரு மாற்றுவழியோ, மாற்றுத் திட்டமோ இருந்து வருவதாகத் தெரியவில்லை. அது குறித்து எவரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
ஞானசார தேரர் போன்றவர்களுடன் உரையாட வேண்டிய அவசியத்தை எடுத்து வரும் மற்றொரு காரணி இலங்கையின் இன்றைய அரசியல் கள யதார்த்தம்; முஸ்லிம்கள் இந்த நெருக்கடியை வெறுமனே ‘கொடிய ராஜபக்ச ஆட்சி எதிர் சிறுபான்மையினர்’ என்ற இருமைக்குள் சுருக்கி, நோக்க முடியாது என்ற யதார்த்தம்; 2024 / 2025 தேர்தல்களை அடுத்து ராஜபக்சாகள் இல்லாத ஓர் ஆட்சி வந்தாலும் கூட, இந்த நெருக்கடி தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற யதார்த்தம்; ராஜபக்சாக்கள் இல்லாத ஓர் அரசாங்கத்திற்கூடாக கரையோர அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட தமது எந்தவொரு முதன்மையான கோரிக்கையையும் கிழக்கு முஸ்லிம்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது போகும் என்ற யதார்த்தம்.
அதிகம் பேர் நினைத்துக் கொண்டிருக்கும் விதத்தில், ராஜபக்ச எதிர்ப்புப் புள்ளடியினால் மட்டும் எல்லாப் பிரச்சினைகளும் ஒரேயடியாக தீர்ந்து விடப் போவதில்லை. கோத்தாபய ராஜபக்சவினால் தீர்த்து வைக்க முடியாத முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும், சஜித் பிரேமதாசவோ அல்லது வேறு ஒரு சிங்களத் தலைவரோ தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
எல்லோரும் இனவாதியாகவும், மதவாதியாகவும் சிந்திக்கப் பழகியிருக்கும் ஒரு சமுதாயத்தில் ஒருவர் மற்றவரை நோக்கி விரல் நீட்டுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. சாதாரண மக்களுக்கு மத்தியில் ஒரு விதமான மதவாத சிந்தனையை, பல்லின, பல் கலாசார நாடு ஒன்றுக்கு எவ்விதத்திலும் பொருத்தமில்லாத ஒரு சிந்தனையை ஊட்டி வளர்த்து, ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரு மாபெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டவர்கள் இப்பொழுது ஒதுங்கி நின்று ‘பிரச்சினை இல்லை, அதிகம் அதிகம் அமல்களை செய்து இந்தச் சோதனைகளிலிருந்து மீண்டு வருவோம்’ என்கிறார்கள்.
ஆனால், கல்முனையிலும், காத்தான்குடியிலும் ஞானசார தேரருடனான சந்திப்புக்களை ஒருங்கிணைப்புச் செய்வதில் பங்கேற்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் (ஆன்மிக ரீதியிலான அம்சங்களுடன் சேர்த்து) லௌகீக ரீதியிலான சில பிரச்சினைகள் குறித்தும் சிந்தித்திருப்பதாக தெரிகிறது. அடுத்து வரவிருக்கும் தலைமுறையினர் குறித்து கரிசனை கொண்டு, சமூக இயங்கியலை துல்லியமாக அடையாளம் கண்டு, அதற்கு எதிர்வினையாற்றியிருப்பதாகத் தெரிகிறது.
நிதான புத்தியையும், ‘பொது மந்தைக்கு’ வெளியில் நின்று, எவரும் பார்க்காத ஒரு கோணத்தில் பிரச்சினைகளை அணுகும் திறனையும் கொண்டிருக்கும் அத்தகைய சமூக செயற்பாட்டாளர்கள் மேலும் மேலும் எமக்குத் தேவை.
எம். எல். எம். மன்சூர் – விடிவெள்ளி பத்திரிகை 16/12/20 Pg-04