பாம் ஒயில் என்றழைக்கப்படும் செம்பனையால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதனையடுத்து இனிப்பு தின்பண்ட மற்றும் பேக்கரி உற்பத்தியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் நுகர்வோர் மேலதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ பாம் ஒயில் எண்ணெயின் இறக்குமதி வரி நூறு ரூபாவால் அதிகரித்துள்ளமையால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மாதாந்தம் 10 கோடி ரூபாவினை இழப்பதாக சங்கத்தின் தலைவர் டி.சூரியகுமார தெரிவித்துள்ளார்.
பாம் ஒயில் மாற்றான பொருள் இலங்கையில் இல்லாததன் காரணமாக இதனை இறக்குமதி செய்ய வேண்டிய கடப்பாடு இனிப்பு தின்பண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த இனிப்பு தின்பண்ட உற்பத்தி தொழில் ஈடுபட்டுள்ளவர்களினால் தயாரிக்கப்படும் பிஸ்கட், குக்கீஸ், கேக், சொக்லட், குளிர்கலி உட்பட்ட பல்வேறு பொருட்கள் சர்வதேச தரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர இனிப்பு தின்பண்ட உற்பத்தியாளர்கள் 40 வெளிநாடுகளுக்கு தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்து 10 கோடி அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியினை பெற்றுக்கொடுக்கின்றனர்.
பாம் ஒயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயினை உபயோகிக் வேண்டிய நிர்பந்தத்திற்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக உற்பத்தி பொருட்களின் தரம் பெருமளவில் பாதிப்பதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.