லிற்ரோ எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்யும் போது
1.1 லிற்ரோ எரிவாயு சிலிண்டரை நீங்கள் கொள்வனவு செய்யும்போது 1.1 எப்போதுமே உத்தரவாதம் பெற்ற விற்ரோ எரிவாயு விற்பனையாளரிடம் அல்லது விநியோகஸ்தரிடம் கொள்வனவு செய்யவும்.
1.2 சிலிண்டரில் ஏதேனும் எரிவாயு கசிவு அல்லது மணம் வருகின்றதா என பரிசேதித்து பார்க்கவும்.
1.3 சிலிண்டரில் எரிவாயு சரியான எடையில் உள்ளதா என. பரிசோதிக்கவும்,
1.4 பாதுகாப்பு சீல் உரிய வகையில் உள்ளதா என பரிசோதித்துக்கொள்ளவும்.
லிற்ரோ எரிவாயு சிலிண்டரை களஞ்சியப்படுத்தும் போது அதை வைக்க வேண்டிய முறை
2.1 எந்நேரமும் நிலைக்குத்தான நிலையில் வைக்கவும்.
2.2 நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்கவும்.
2.3 தீ அல்லது நெருப்பு பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகில் வைக்க வேண்டாம்.’
2.4 அவசரமான சந்தர்ப்பங்களில் மிக இலகுவாக அகற்றிக்கொள்ளக்கூடியவாறு தடை இல்லாத இடத்தில் வைக்கவும்.
லிற்ரோ எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டில் செய்யத் தாகாதவை
3.1 சிலிண்டரை பயன்படுத்தத் தயாராக முன் பாதுகாப்பு சீலை அகற்றுதல்,
3.2 சிலிண்டர்களை நில மட்டத்துக்கு கீழ் அல்லது கட்டிட அடித்தளம் (பேஸ்மன்ட்) என்பவற்றிற்கு அருகில் வைத்தல்.
3.3 சிலிண்டரை அங்கும் இங்கும் நகர்த்துதல், சிலிண்டரை கீழே கைவிடல்.
3.4 சிலிண்டரை சமையற்பாத்திரபீடத்தினுள் (Pantry cupboard) வைக்க வேண்டாம்.
3.5 பொருத்தமற்ற ஆயுதங்களை பயன்படுத்தி (ஆணி, திருகாணி (Screwdriver ), போன்றவை) சிலிண்டர் வால்வில் ஏற்படும் கசிவை திருத்த முயல வேண்டாம். அவ்வாறு செய்தல் சிலிண்டர் வால்வில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
உபகரண பாவனை மற்றும் பரிசோதனை முறை
4.1 எப்போதும் விற்ரோ கேஸ் கம்பெனியினால் அனுமதிக்கப்பட்ட *ரெகுலேட்டர்கள், ஹோஸ் குழாய் என்பவற்றை பாவிக்கவும். இவற்றை உத்தரவாதம் பெற்ற விற்ரோ எரிவாயு விற்பனையாளர்களிடம் அல்லது விநியோக நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
4.2 ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு அடுப்பு என்பவற்றுடன் பொருத்தப்படும் ஹோஸ் குழாய் அதற்குரிய கிளிப் மூலம் இறுக்கமாக்கப்பட வேண்டும்.
4.3 ரெகுலேட்டர் மற்றும் ஹோஸ் குழாய் என்பவற்றில் துவாரங்கள், சிதைவுகள் அல்லது வாயுக்கசிவு உள்ளதா என பரிசோதித்துக்கொள்ளல் வேண்டும்.
4.4 ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை ரெகுலேட்டரையும், இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஹோஸ் குழாயையும் மாற்றவும்.
லிற்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரெகுலேட்டரை பொருத்தும்போது
5.1 சிலிண்டரை நில மட்டத்திற்கு மேல் வைத்துக்கொள்ளவும் அதை விட உயரத்தில் எரிவாயு அடுப்பு இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்க.
5.2 எரிவாயு அடுப்பு அணைக்கப்பட்ட நிலையில் (OFF position) இருக்க வேண்டும் / ரெகுலேட்டர் அணைக்கப்பட்ட நிலையில் (OFF position) இருக்க வேண்டும்.
5.3 சூழலில் தீப்பற்றக்கூடிய வழிகள், தீச்சுவாலை அல்லது தீயை வெளியிடக்கூடிய மின் உபகரணங்கள் இல்லாதிருத்தல்.
5.4 ரெகுலேட்டர் “கிளிக்” எனும் சத்தம் கேட்கும் வரை சிலிண்டரின் வால்வுடன் அழுத்தப்பட வேண்டும்.
5.5 ரெகுலேட்டரை பொருத்திய பின் வாயுக்கசிவின் மணம் அல்லது சத்தம் ஏதும் உள்ளதா என பரிசோதித்துக்கொள்ளவும்.
5.6 உணவு சமைக்கும் போது கதவுகள் ஜன்னல் என்பவற்றை திறந்து வைக்கவும்.
சுயமாக பற்றிக்கொள்ளாத எரிவாயு அடுப்பை பற்ற வைக்கும் முறை
6.1 எரிவாயு அடுப்பின் மேற்பாகத்தை இறப்பர் ஹோஸ் குழாய் தொடாது இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
6.2 தீக்குச்சி அல்லது லைட்டர் (LIGHTER) ஒன்றை பற்றவைக்கவும்.
6.3 அந்த சுவாலையை பர்னர் அருகே கொண்டு செல்லவும்.
6.4 எரிவாயு அடுப்பின் வால்வை திறக்கவும் (ON)
6.5 எரிவாயு அடுப்பினை பற்றவைத்துக்கொண்டு தீக்குச்சி அல்லது லைட்டரை LIGHTER பற்றவைக்கவேண்டாம்.
எரிவாயு சிலிண்டர் பாவிக்கப்படாத சந்தர்ப்பத்தில்
7.1 எரிவாயு அடுப்பின் அனைத்து ஆளிகளையும் அணைத்திடுங்கள் (OFF)
7.2 ரெகுலேட்டரை சிலிண்டரிலிருந்து கழற்றாமல் ஆளியை (Switch OFF) நிலையில் வைக்கவும்.
7.3நீங்கள் எதாவது சந்தர்ப்பங்களில் நீண்ட நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டி ஏற்பட்டால் அருகில் உள்ள லிற்ரோ கேஸ் விற்பனையாளர், விநியோகஸ்தர் அல்லது லிற்ரோ கேஸ் வாடிக்கையாளர் சேவைக்கு அழைத்து உதவியினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிவு மணத்தை அல்லது எரிவாயு வெளியேறும் சத்தத்தை உணர்தல்
8.1 எரிவாயு அடுப்பு. எரியும் நெருப்பு சுவாலை அனைத்தையும் அணைத்து (OFF) விடவும்.
8.2 ரெகுலேட்டரை அணைத்துவிட்டு (OFF) சிலிண்டரின் வால்விலிருந்து கழற்றி விடவும்.
8.3 சிலிண்டர் வால்வினை பாதுகாப்பு மூடியினால் மூடிவிட்டு வீட்டுக்கட்டிடத்துக்கு வெளியே மிகவும் காற்றோட்டமான இடத்திற்கு சிலிண்டரை கொண்டு செல்லவும்.
8.4 காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்காக எல்லா கதவு ஜன்னல்களையும் திறந்து வைக்கவும்.
8.5 எந்தவொரு மின்சார உபகாரணங்களையும் உபயோகிப்பதையும், ஆளி (Switch) போடுவதை தவிர்க்கவும்.
8.6 எரிவாயு கசிவு உள்ளதா என்பதை அறிய ரெகுலேட்டர், ஹோஸ் குழாய், எரிவாயு அடுப்பு என்பவற்றை பரிசோதித்துக்கொள்ளவும்.
8.7 எரிவாயு அடுப்பு, ரெகுலேட்டர், ஹோஸ் குழாய் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் உத்தரவாதம் பெற்ற லிற்ரோ எரிவாயு விற்பனையாளர் அல்லது பயிற்சிபெற்ற தொழிநுட்ப உதவியாளரின் உதவியோடு பரிசோத்தித்துக்கொள்ளவும்.
8.8 இது சம்பந்தமாக லிற்ரோ கேஸ் வாடிக்கையாளர் சேவை RIL என்ற இலக்கத்தில் அழைத்து உதவியை பெறவும்.
8.9 எரிவாயு கசிவினை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் வரை எரிவாயு சிலிண்டரை மீண்டும் இணைக்க வேண்டாம்.
எரிவாயு சிலிண்டரில் எரிவாயு முடிந்தவுடன் பாதுகாப்பு மூடியை பொருத்தி எரிவாயு விற்பனையாளரிடம் மீள கையளிக்கவும்
மேலதிக தகவல்களுக்கு விற்ரோ வாடிக்கையாளர் சேவையை அழையுங்கள் 1311
Fire and Rescue Service – 110 | Police – 119
Litro Gas Lanka Ltd,
No 267, Union Place, Colombo 02, Sri Lanka
litrogas.com
தினக்குரல் 8-12-21