சீன ஆய்வகத்திலிருந்து உருவாக்கப்பட்டு வந்தது தான் கொரோனா வைரஸ். எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை நாங்கள் வேறுவழி யில் ஈடு செய்வோமென ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு எதிராக விரைவில் அமெரிக்கா புதிய வரிகளை விதிக்க தயாராகி வருவதை சூசகமாக சுட்டிக்காட்டி ட்ரம்ப் பேசியுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் அந்நாட்டில் ஏற்படுத்திய பாதிப்பை விட அமெரிக்காவிலும், ஐரோப்ப நாடுகளிலும் தான் அதிகமான
பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவில் இதுவரை ஏறக்குறைய 11இலட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 63ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நேற்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமரிக்கவுககும் , உலகிற்கும் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புக்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் நாட்டில் நேர்ந்த உயிரிழப்புகளுக்கும், பொருளாதார இழப்புக்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். சீனாவுக்கு எதிராக கடனை நாங்கள் இரத்து செய்ய மாட்டோம்.
அது பாதகமான பலனை எங்களுக்கு அளிக்கும். டொலரின் மதிப்பு சர்வதேச அளவில் ஊசலாட்டத்துக்கு கொண்டு செல்லும். உலகிலேயே அமெரிக்க டொலர் தான் வலிமையானது. அதை நாங்கள் பாதுகாக்க வேண்டும். வேறு விதத்தில் சீனாவிடம் இருந்து நாங்கள் இழப்பீட்டை வசூலிப்போம். சீனாவுக்கு எதிரான எங்கள் விளையாட்டை விரைவில் தொடங்குவோம். அதாவது சீனாவுக்கு எதிராக வரி விதிப்பை அதிகப்படுத்துவோம் என தெரிவித்தார்