உலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்

உலகின் மிக நீண்ட பஸ் பயணமாக இந்தியாவின் டில்லியிலிருந்து லண்டனுக்கான பஸ் சேவையானது எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குருகிராம் நகரைச் சேர்ந்த ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் டில்லியிலிருந்து லண்டனுக்கு பஸ் சேவையை அறிவித்துள்ளது.

இந்த பயணம் 18 நாடுகள் வழியாக 12,000 மைல்கள் தூரத்தை 70 நாட்களில் கடந்து செல்லும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பயணத்திற்காக 20 வகுப்பு இருக்கைகள் கொண்ட சிறப்பு பஸ், வணிக வகுப்பு இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. பயணிக்கும் 20 பயணிகளைத் தவிர, ஒரு சாரதி, உதவி சாரதி, ஒரு வழிகாட்டி மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள். 

பயணத்தின் போது வழிகாட்டி மட்டும் அவ்வப்போது இடைவெளியில் மாற்றப்படுவார்கள். பயணிகளின் விசா ஏற்பாடுகளையும் பஸ் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுக்கும்.

இந்த பயணத்திற்கான கட்டணம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். பயணிகள் தங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வெவ்வேறு இடங்களைத் தேர்வு செய்யலாம், 

அதே நேரத்தில் குறிப்பிட்ட தொகுப்பின் படி அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், டில்லியில் இருந்து லண்டனுக்கான முழு பயணத்தையும் அவர்கள் பயன்படுத்தினால் ஒரு நபருக்கு சுமார் 20,000 அமெரிக்க டொலர் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான பயணத்தை துஷார் அகர்வால் மற்றும் சஞ்சய் மதன் ஆகியோர் நிறுவிய பயண நிறுவனமான அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் வடிவமைத்துள்ளது.

அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனர்கள் சஞ்சய் மதன் மற்றும் துஷார் அகர்வால் ஆகியோர் இந்த பயணத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

Free Visitor Counters Flag Counter