அன்பார்ந்த அக்குறனை வாழ் பொதுமக்களே!
எமது நாட்டில் மிக வேகமாக கோவிட்-19 தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கும் பயங்கரமான காலத்தில் எமது ஊரில் அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் நாளை (2020.04.27) தளர்த்தப்பட இருக்கின்றது. Lockdown நீக்கப்பட்டாலும், self lockdown செய்து கொள்வது உங்களுக்கும், குடும்பத்தவர்களுக்கும், ஊருக்கும் மிகவும் பாதுகாப்பானது என்பதுவே யதார்த்தம். அந்த வகையில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் கீழ்வரும் விடயங்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
1) அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.
2) பொருட்கள் தேவையானவர்கள் ஏற்கனவே அமுலில் உள்ள home delivery முறையை பாவியுங்கள். அது முடியாவிட்டால் வீட்டிற்கு அருகிலுள்ள சிறிய கடைகளில் கொள்வனவு செய்யுங்கள்.
3) வீட்டை விட்டு வெளியேறும் எல்லா சந்தர்ப்பங்களிலும் கைகளை முறையாக சவர்க்காரமிட்டு சுத்தம் செய்தல் அல்லது hand sanitizer பாவித்தல், ஒவ்வொருவருக்கும் இடையில் 1 – 2 மீட்டர் தூரத்தை பேணுதல் மற்றும் முறையாக மாஸ்க் (mask) பாவித்தல் கட்டாயமாகும்.
4) வயோதிபர்கள் மற்றும் நீண்ட கால நோயாளிகள் அத்தியாவசிய மருத்துவத் தேவைகளைத்தவிர வேறு எந்தக்காரணம் கொண்டும் வெளியேறக் கூடாது.
5) பொருட்கள் வாங்குவதற்கான தேவை இருந்தால், ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் வரவும்.
6) பெருநாள் கொள்வனவுகள் (festival shopping) முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது.
7) நீங்கள் வெளியில் சென்று வீடு திரும்பும் போது வீட்டிற்குள் நுழைய முன் நன்கு சவர்க்காரம் இட்டு குளித்து கொள்வதோடு ஆடைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
8) இயன்றளவு சொந்த வாகனத்தையே பாவியுங்கள் அல்லது நடந்து செல்லுங்கள். ஆட்டோ முச்சக்கரவண்டிகளில் இருவருக்கு மேல் பயணம் செய்ய வேண்டாம்.
9) நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது உங்களது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள். உங்களது தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்திற்கு ஏற்ப நீங்கள் வீட்டைn விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட நாள் தீர்மானிக்கப்படும். இது அரசாங்க உத்தரவாகும் என்பதையும் பொலிஸாரினால் பரீட்சிக்கப்படும் என்பதையும் கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள்.
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமும், வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட நாட்களும் பின்வருமாறு..
1 அல்லது 2 – திங்கள்
3 அல்லது 4 – செவ்வாய்
5 அல்லது 6 – புதன்
7 அல்லது 8 – வியாழன்
9 அல்லது 0 – வெள்ளி
அக்குறணை சுகாதாரக் குழு 2020.04.26