கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடி!

கனடா தொழிலுக்காக விசா பெற்றுத் தருவதாக தெரிவித்து பல்வேறு முறைகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற மூன்று முறைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

குறைந்தளவிலான ஆவணங்களுடன் கனடாவிற்கு விசா பெற்றுத் தருவதாக தெரிவித்து பிரபல இணையத்தளம் ஒன்றில் விளம்பரங்களை மேற்கொண்டு சந்தேகநபர்கள் குறித்த மோசடி வியாபாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மோசடிக்குள் சிக்கிக்கொள்ளும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் நிலவும் பணம், ஒன்லைன் முறை மூலம் வேறு கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கந்தானை, மாரவில, ரத்தொலுகம, மெல்சிறிபுர மற்றும் கல்குலம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான மோசடிகளில் சிக்கிக் கொள்பவர்கள் 0112326979 தொலைப்பேசி இலக்கத்திற்கு தகவல்களை பெற்றுத் தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter