அக்குறணை புளுகோகத்தென்னயில் அமைத்துள்ள அரபா மஹல்லா அக்கிராமத்தில் உள்ள தனவந்தர்கள் இளைஞர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகளின் உதவியுடன் அக்கிராமக்களின் நிதியுதவியுடன் அக்கிராமத்தில் வாழும் சகல குடும்பத்தினர்களுக்கும் சுமார் 15,000/= பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இக்கிராமம் அக்குறணையில் உள்ள மற்ற கிராம மக்களுக்கு ஒர் முன் உதாரணம் என்றே கூற வேண்டும். அக்குறணை நலன்புரி சங்கத்தினரால் வழங்கி வைக்கப்படும் உலர் உணவுப்பொதிகளை கூட பெற்று கொள்வதை மறுத்த இக்கிராம மக்கள் ஏனைய கிராமங்களில் வாழும் வறிய மக்களுக்கு வழங்கி வைக்கும்படி அக்குறணை நலன்புரி சங்கத்தினரிடம் வேண்டிக்கொண்டது வரவேற்கத்தக்க விடயமாகும்.
இப்பதிவினை ஒரு பிரதேசவாதமாக பார்க்க வேண்டாம். அக்குறனையில் பல பகுதிகளிலும் இப்படியான பல விடயங்கள் நடந்து கொண்டிருகின்றது, எந்த ஒரு மஹல்லாவினையோ அல்லது ஊரையோ உயர்த்தி பேசுவதோ நோக்கம் அல்ல
இந்த இக்கட்டான நிலைமையில் அக்குறணையில் பல தனவந்தர்கள், இளைஞயர்கள், சமூக அமைப்புக்கள் எல்லாப் பகுதிகளிலும் தமது சேவையினை சிரமம் பாராது இன்றுவரை செய்து கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் மறுமையில் மிகுந்த கூலியினை கொடுக்க வேண்டும் என அனைவரும் துஆ செய்வோம்.