கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியை மீள திறப்பது குறித்து நாளை (15) விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவிக்கின்றார்.
சீரான வானிலை நாளைய தினம் (15) நிலவுமாக இருந்தால், வீதியின் ஒரு வழி பாதையை மாத்திரம் திறப்பதற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளுடனான சந்திப்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதன்படி, மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதுடன், வாகனங்களுக்கு இடையில் குறிப்பிட்ட இடைவெளியை பேணி பயணிப்பது கட்டாயமானது எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
நிலத்தடியில் காணப்பட்ட நீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மண்சரிவு அபாயம் காணப்படும் பஹல கடுகண்ணாவ பகுதியில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் இன்றைய தினமும் முன்னெடுத்துள்ளனர்.
-தமிழன்.lk