சிறுமிகள் மூவரும் எச்சரிக்கப்பட்டு பிணையத்தின் கீழ் பெற்றோரிடம் ஒப்படைப்பு

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போனதக கருதி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த போது வீடு திரும்பிய 3 சிறுமிகளும் பிணையம் ஒன்றின் கீழ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

இந்த மூன்று சிறுமிகளும் இன்று வாழைத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று பிணையம் ஒன்றின் கீழ் அம்மூன்று சிறுமிகளும் இவ்வாறு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர்.

இதன் பிறகு, வீட்டுக்கு தெரியாமல் இரகசியமாக  அங்கிருந்து வெளியேறினால், பிணையம் ரத்து செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்படுவர் என இதன்போது நீதிவான் 3 சிறுமிகளையும் எச்சரித்தார்.

 இந்த நிலையில் இது குறித்த மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

(எம்.எப்.எம்.பஸீர்) -வீரகேசரி-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter