இலங்கையில் ரமழான் தலை பிறை தென்படவில்லை – சனிக்கிழமையே புனித நோன்பு ஆரம்பம்
ஹிஜ்ரி 1441ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் மாத தலை பிறை, நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று (23) வியாழக்கிழமை மாலை தென்பட்டவில்லை என அறிவிக்கப்பட்டது.
இதனால் புனித ஷஃவான் மாத்தினை 30 நாட்களாக பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார விவகார திணைக்களம் ஆகியன இணைந்து அறிவித்தன.
புனித ரமழான் மாத தலை பிறையினை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போது, நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டவில்லை. இதனை அடுத்தே புனித ஷவ்வான் மாத்தினை 30 நாட்களாக பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இந்த தலை பிறையை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, பிறைக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.