பாத்திமா மும்தாஸின் கொலைக்கான காரணம் வெளியானது!

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

கொழும்பு மாளிகாவத்தை வீட்டு தொகுதியை சேர்ந்த மொஹமட் ஷாஷி பாத்திமா மும்தாஸ் என்ற இந்த பெண் கொலை செய்யப்பட்டு சடலம் பயணப்பையில் வைத்து குப்பை மேட்டில் வைத்து செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான பொலிஸ் விசாரணையில், உயிரிழந்த பெண் இறுதியாக ரொஸானா என்ற பெண் மற்றும் அவரது சகோதரனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.

குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட ரொஸானா என்ற பெண்ணும் சூதாட்டத்திற்கு மிகவும் அடிமையாகிய ஒருவர் என தெரிவந்துள்ளது. ரொஸானா கொழும்பு சூதாட்டத்தில் நிலையத்தில் வைத்து தன்னிடம் இருந்த அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இறுதியாகி திருமண மோதிரத்தையும் அவர் இழந்துள்ளார்.

அவ்வாறு இழந்த மோதிரம் அடகு வைக்கப்பட்ட நிலையில் அதனை மீட்க ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அதனை மீட்டு தருமாறு ரொஸானா, கொலை செய்யப்பட்ட மும்தாஸிடம் வினவியுள்ளார்.

மும்தாஸும் தீவிரமாக சூதாட்டத்திற்கு அடிமையாகியவராகும். சூதாட்டத்தில் தோற்று தங்க நகைகளை இழப்பவர்களின் பொருட்களை அடகில் மீட்டு வியாபாராம் நடத்தும் நடவடிக்கை ஒன்றை மும்தாஸ் மேற்கொண்டு வந்துள்ளார்.

ரொஸானாவின் கோரிக்கைக்கமைய மும்தாஸ் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டிற்கு சென்று ரொஸானாவின் மோதிரத்தை அடகில் இருந்து மீட்டு சிறிய பணத்தை அவருக்கு வழங்கிவிட்டு மோதிரத்தை தன்னிடம் வைத்துக் கொள்வதற்கே மும்தாஸ் திட்டமிட்டுள்ளார்.

அடகில் இருந்த பொருளை மீட்பதற்காக ரொஸானா மற்றும் மும்தாஸ், ரொஸானாவின் சகோதரனுக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அதற்கமைய அடகில் இருந்து மோதிரத்தை மீட்ட பின்னர் ரொஸானா, தேனீர் அருந்த வீட்டிற்கு வருமாறு மும்தாஸை அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று மும்தாஸ் மட்டக்குளியில் உள்ள ரொஸானாவின் வீட்டிற்கு வென்றுள்ளார்.

தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது ரொஸானாவின் சகோதரன் பின்னால் வந்து மும்தாஸுக்கு பலமாக தடியால் தாக்கி கொலை செய்துள்ளார். கொலையின் பின்னர் சடலம் வீட்டினுள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இரவு வீட்டிற்கு வந்த ரொஸானாவின் கணவருக்கும் கொலை சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தி, அதனை வெளியே சொல்ல வேண்டாம் என ரொஸானா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் சடலம் பை ஒன்றில் வைக்கப்பட்டு, சிறிய லொரி ஒன்றில் ஏற்றப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள மின்சார உபகரணங்கள் உடைந்துள்ளதாகவும் அதனை பழுது பார்க்க கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறி லொறியில் மின்சார உபகரணங்களும் ஏற்றப்பட்டுள்ளது. 

அவ்வாறு ஏற்றி செல்லப்பட்ட சடலம் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து ரொஸானாவின் சகோதரனினால் முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு, சப்புகஸ்கந்த குப்பை மேட்டில் கைவிடப்பட்டு செல்லப்பட்டுள்ளது. 29ஆம் திகதியே சடலம் குப்பை மேட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மும்தாஸ் உயிரிழந்த பின்னர் அவரிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை ரொஸானா கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

தினக்குரல் (8-11-21)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter