பதவி விலகும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சுகாதார பிரச்சினைகள் காரணமாக பதவி விலகுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உடல்நலக் குறைவுக்கு மத்தியில் பிரதமர் அபே இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபடவுள்ள நிலையில் இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

2012ம் ஆண்டு 2 ஆம் முறையாக ஜப்பான் பிரதமராக பதவி ஏற்ற பின் அபே 2,799 நாட்களை வெற்றிகரமாக அப்பதவியில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே 2007 ஆம் ஆண்டு உடல் உபாதை காரணமாக தான் வகித்து வந்த பிரதமர் பதவியைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 65 வயதாகும் அபே, நீண்ட நாட்களாக சிறுகுடல் பாதிப்பால் அவதியுற்று வரும் அபே, தனக்கு வயதாகிவிட்டதால் பிரதமர் பதவியை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

Free Visitor Counters Flag Counter