பிரதேச சபை உறுப்பினராகவேனும் பதவி வகிக்காத, அரசியல் அனுபவம் இல்லாத கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டாம். அவரால் இந்த நாட்டை நிர்வகிக முடியாது என்று முதலில் சப்தமிட்டு கூறியது நானே.அன்று நான் கூறிய விடயம் இன்று உண்மையாகியுள்ளது என குமார வெல்கம எம்.பி. தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்த குமார வெல்கம எம்.பி. மேலும் கூறுகையில், பிரதேச சபை உறுப்பினராக வேனும் பதவி வகிக்காத, அரசியல் அனுபவம் இல்லாத கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டாம். அவரால் இந்த நாட்டை நிர்வகிக முடியாது என்று அன்று அப்படி நான் சொன்னபோது எனக்கு மக்கள் ஏசினார்கள் .இன்று எனது கருத்து பற்றி மக்கள் கதைக்கின்றனர். எனது அரசியல் அனுபவத்தினை வைத்துத்தான் அன்று நான் அப்படி சொன்னேன். அன்று வேறு எவரும் கூறவில்லை முதலில் நான்தான் முழு நாட்டிற்கும் கேட்கும் விதத்தில் உரத்த சப்தமிட்டு கூறினேன். அதுதான் உன்மை.
இன்று இந்த நாட்டை அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள்தான் ஆட்சி செய்கின்றனர். நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா என்றுதான் கேட்க வேண்டும் அப்படி ஏன் சொல்கின்றேன் என்றால் காரணம் இருக்கின்றது. இன்று அரிசியின் விலையை யார் தீர்மானிக்கின்றனர்? சீனியின் விலையினை தீர்மானிப்பது யார் எல்லாமே அவர்களுடய நண்பர்கள்தான்.அமைச்சர்கள் சொல்வதை செவிசாய்க்காது விட்டால் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காவிட்டால் அதற்குள் இருந்து கொண்டு கூக்குரல் இடுவதை விட வெளியேறுவதுதான் சிறந்தது .
மக்களுக்கு சேவைசெய்வதற்கு அமைச்சுப்பதவி தேவையில்லை வெளியில் வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை நல்ல இடத்துக்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்போம்.
நாட்டிலுள்ள அனைத்து வளங்களையும் விற்பனை செய்கின்றனர் இப்படி சென்றால் என்ன நடக்கும்? நாடு பாரிய அழிவுப்பாதைக்கு செல்கின்றது. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றார்.
அநுμõதபுμம் நிருபர் – தினக்குரல் 2-11-21