ஞானசார தேரர் வஹ்ஹாபிஸம் பற்றி பேசியுள்ள அதேநேரம், அகில இலங்கை ஐம் இய்யத்துல் உலமாவிடம் அது குறித்துக் கேட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் குறித்த தேரர் வஹ்ஹாபிஸம் என்பதன் மூலம் எதை நாடுகின்றார்? அதன் வரைவிலக்கணம் என்ன? என்று அவரிடம் ஆரம்பமாக கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேள்வி எழுப்பியுள்ளது.
பொது பல சேனா அமைப்பால் அனுப்பப்பட்ட திறந்த மடல் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தேசியம், நடுநிலை, இணக்கப்பாடு, பன்மைத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒரு நூற்றாண்டை அண்மித்த நிலையில் இயங்கிவரும் ஒரு நிறுவனமாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பு அஹ்லுஸ் ஸான்னா வல்ஜமாஅத்’ கோட்பாட்டைச் சோந்த, இந்தாட்டின் யாப்பையும் சட்டத்தையும் ஜனநாயக விழுமியங்களையும் மதித்து செயற்படும் அனைத்து ஆலிம்களுக்கும் அங்கத்துவம் வழங்க அனுமதிக்கின்றது.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஐமாஅத்’ கோட்பாடு என்பது, இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன், அல்ஹதீஸ், அல்இஜ்மா”, அல்கியாஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவைகளை எமது முன்னோர்களான சஹாபிகள், தாபிஃகள், இமாம்கள் ஆகியோர் விளங்கிக்கொண்ட அடிப்படையின் பிரகாரம் விளங்கிச் செயலாற்றுதலாகும்.
எனவே, ஐம்இய்யாவில் தனது அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்ட அனைவருடனும் ஒன்றிணைந்து, எவ்வித பாகுபாடுமின்றி, தனது யாப்பின் அடிப்படையில் ஜம்இய்யா பயணிக்கிறது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்்கின்றோம்.
கலகொட அத்தே ஞானசார தேரர் பல சந்தர்ப்பங்களில் தீவிரவாதம், வஹ்ஹாபிஸம் பற்றி பேசியுள்ள அதேநேரம், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமாவிடம் அது குறித்துக் கேட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் குறித்த தேரர் வஹ்ஹாபிஸம் என்பதன் மூலம் எதை நாடுகின்றார்? அதன் வரை விலக்கணம் என்ன? என்று அவரிடம் ஆரம்பமாக கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.
இறுதித் தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடத்தல், முஸ்லிம் உம்மத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ்களை மறுத்தல், ஸஹாபாக்கள் விடயத்தில் அவமரியாதையாக நடந்துகொள்ளல், இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்களை அவமதித்தல், அவர்களின் வழிகாட்டல்களைப் புறக்கணித்தல், மத்ஹப்களைப் புறக்கணிப்பதோடு அவற்றைப் பின்பற்றுவதை வழிகேடாகக் கருதுதல், தமது கருத்துக்கு முரண்படுவோரை ஏற்க மறுத்து அவர்களை வழிகேடர்கள் எனக் கருதி அவர்களின் உரிமைகளை மறுத்தல், நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, அமைதி ஆகியவற்றுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளல், அதற்குப் பிறரைத் தூண்டுதல், பிற மதங்களை நித்தித்தல், முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு கீழ் மட்டுமே வாழ வேண்டும் அல்லது ஒரு இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டுவதே இஸ்லாத்தின் அடிப்படை என்ற கொள்கையை கொண்டிருத்தல், முஸ்லிம்கள் முஸ்லிம்கஞூடன் மாத்திரமே நல்லுறவு கொள்ள வேண்டும் என்பதுடன் முஸ்லிமல் லாதவர்களுடன் நல்லுறவு கொள்ளக்கூடாது என்ற சிந்தனையை கொண்டிருத்தல் போன்றவற்றை மதத்தின் பெயரால் தீவிரவாதம் எனக் கருதுகிறோம். இது வஹ்ஹாபிஸம் என்ற பெயரிலோ அல்லது வேறெந்தப் பெயர்களிலோ அழைக்கப்பட்டாலும் அவையனைத்தையும் ஜம் இய்யா முற்று முழுதாக ‘நிராகரிக்கின்றது. இவ்விடயங்களில் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக தீவிரமாக செயற்படக்கூடியவர்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. அப்படியான தீவிரமான சிந்தனைகளைக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அச்சிந்தனைகளிலிருந்து தம்மை மீட்டிக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஐம்இய்யாவினால் வெளியிடப்பட்டிருக்கும் “மதத்தின் பெயரால் தீவிர வாதம் வேண்டாம்’ என்ற கைநூலை வாசிப்பதுடன், முஸ்லிம்கள் அச்சிந்தனைகளின் பக்கம் ஈர்க்கப்படாது பாதுகாப்பதற்கு ஆலிம்கள், கல்விமான்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட ஓட்டுமொத்த முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு செயற்பட வேண்டும் என்று இதில் ஜம்இய்யா வேண்டு கோள்விடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். அல்குஆனில் ௮ல்லாஹ்வின் அன்பு, கருணை பற்றி நிறையவே குறிப்பிடப் பட்டிருப்பினும், உங்களது அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அல்குர்ஆனுக்கும் பல சந்தர்ப்பங்களில் அகெளரவப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அத்துடன் அவர் அல்குர்ஆனுக்கு பல சந்தர்ப்பங்களில் பிழையாக விளக்கம் கொடுக்க முயற்சித்துள்ளமையானது உலக வாழ் முஸ்லிம்களைப் பொதுவாகவும் இலங்கை வாழ் முஸ்லிம்களை குறிப்பாகவும்; நோவினை அடையச் செய்துள்ளது. இது மத நிந்தனையாக அமைந்திரப்பதோடு, நம் நாட்டின் யாப்பு உத்தரவாதப்படுத்தியிருக்கும் மதச் சுதந்திரத்தை பாதிப்பதாகவும் அமைந்துள்ளது. மேலும் இச்செயற்பாடு மதகுரு ஒருவருக்கு ஒருபோதும் பொருந்தாத செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. இச்செயற்பாடுகள் நம் தாய்நாடு பற்றிய ஒரு பிழையான விம்பத்தை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்துவதோடு, பல்லினங்களுக்கு மத்தியில் காணப்படும் சகவாழ்வை பாதிப்பதாகவும் அமைத்துள்ளது.
அவ்வாறே, புனிதமிகு அல்குர்ஆனை மொழி பெயர்ப்பின் ஊடாக அரைகுறையாக வாசத்துவிட்டு, ஒவ்வொரு வசனமும் அவை இறக்கப்பட்ட பின்னணி, எங்களுடைய உயிரினும் மேலான தபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவற் றிற்கு கூறிய விளக்கங்கள், நபித்தோழர்கள் அவற்றை அணுகிய முறை, சுமார் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு மேலாக அல்குர்ஆன் விரிவுரையாளர்களும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் அதற்கு வழங்கியிருக்கும் வியாக்கியானங்கள், அல் குர்ஆனை விளங்குவதற்கு தேவையான ஏனைய கலைகள் என்பனவற்றைப் புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக அதனை விளங்க முற்பட்டதே தவறான புரிதல்களுக்கும் விளக்கங்களுக்கும் அடிப்படைக் காரணமாகும் என நம்புகின்றோம்.
எந்த விடயத்தையும் அதை நன்கறிந்த துறை சார்ந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டு மென்பதே அல்குர்ஆனின் போதனையாகும். ‘நீங்கள் அதனைப் பற்றி அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ (16: 43) என அது முழு உலகுக்கும் வழிகாட்டுகின்றது.
அந்த வகையில் அல்குர்ஆன் வசனங்களை விளங்கும் முறைகள் பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அல்குர்ஆனின் சிங்கள விளக்கவுரையில் பின்வரும் இரண்டு தலைப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. (அது இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).
- அல்குர்ஆனுக்கான அறிமுகம்.
- அல்குர்ஆன் விளக்கவுரையின் அறிமுகம்.
அல்குர்ஆனின் சில வசனங்கள் மற்றைய சில வசனங்களுக்கு விளக்கமாக அமைகின்றன. அதே போல் எங்களுடைய உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களும் அல்குர்ஆனுக்கு விளக்கமாகும். அல்குர்ஆனில் விரிவாகச் சொல்லப்படாத விடயங்கள் ஹதீஸ்களின் மூலமே விளக்கிங்கொள்ளல் வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடிவெள்ளி (28-10-2021)