நீரிழிவு – வலியற்ற , அமைதியான கொலையாளி

நடைப்பயிற்சியின்போது இதயத் துடிப்பில் வித்தியாசம் இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும! எமது மருத்துவத்தில் நீரிழிவு நோயாளிகள் சுறுசுறுப்பில் குழந்தைகள் போலவும் உணவுக் கட்டுப்பாட்டில் கட்டிளம் யுவதிகள் போலவும் உடற்தொழிற்பாட்டில் கூலித் தொழிலாளிகள் போன்றும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பல நோயாளிகளும் இயற்கை மருத்துவம் மூலம் சக்கரை நோய் புரணமாக குணமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. இவ்வாறு ஒரு மருத்துவர், தான் நோயைக் குணப்படுத்தி விடுகிறேன் என்று கூறினால் அவர் பொய் சொல்கிறார் அல்லது சரியாக படிக்கவில்லை என்றே கருத இடமுள்ளது. எனவே, போலி விளம்பரங்களையும் மிகைப்படுத்தி பேசுவதையும் நம்பக்கூடாது. எனவே உண்மையாக படிப்பும் விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டமும் மருத்துவ விழிப்புணர்வும் உள்ள மருத்துவரின் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நீரிழிவு நோயை வலியற்ற நோய் அல்லது அமைதியான கொலையாளி என்றும் கூறலாம்.

பொதுவாக உணவுக்கு உப்பு சேர்க்கும் போது, இலவங்கம் இலையிலுள்ள உப்பிகை அளவை குறைவாக பயன்படுத்துவதே சிறந்தது.

நீரிழிவை கட்டுப்படுத்தும் சில உணவுகள்.

சீரகம், வெந்தயம், உழுந்து, கறிவேப்பிலை, எள், எள்ளுப்பிண்ணாக்கு. கசகசா, கேள்வரகு, சிவப்பு அவல், மஞ்சள், நெல்லி வற்றல்

நார்த்தன்மையான தானிய உணவுகளுக்கு முக்கியம் குடுக்க வேண்டும்.

இவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் எடுக்க வேண்டும்.

குரக்கன், சாமை, திணை, வரகு, கொள்ளு, நன்றாக வற்ற காய்ச்சி ஆடை நீக்கிய பசுப்பாலை இரவில் எடுக்க வேண்டும். கைப்பு சுவை அதிகமுள்ள காய்கறிகளை உணவில் அதிகமாக எடுக்க வேண்டும். குருவித்தலைபாகல், கொவ்வை, பாகல், சுண்டங்காய், காத் தோட்டிக்காய்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு, பலகாரங்கள், தேன், கேக், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், வாழைப் பழம், பலாப்பழம், திராட்சை, சப்போட்டா, ஜாம், தேங்காய்ப்பால், உருளைக் கிழங்கு, சோணைக்கிழங்கு, குளிர் பானங்கள், வெல்லம், மாம்பழம், ஐஸ்கிறீம்

நீரிழிவு நோயாளிகள் உடற்ப யிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டியவை

நடைப்பயிற்சி செய்யும் போது மிருதுவான காலணிகளை அணிந்து நடக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்யும்போது இதயத் துடிப்பில் வித்தியாசம் இருப்பதாக உணரந்தால் அன்றே மருத்துவரை சந்திக்க வேண்டும். நடைபயிற்சி செய்பவர்கள் தினமும் 30 நிமிடம் தொடக்கம் 1 மணி நேரம் வரை நடக்கலாம. நடைபயிற்சி செய்பவர்கள் வாரத்துக்கு குறைந்தது 6 நாட்கள் நடக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் கடைப்பிடிக்க கூடிய ஆசனங்கள்

பத்மாசனம், மயுரா சனம், சர்வாங்காசனம், ஹலாசனம், பட்சிமோத் தாசனம்

நீரிழிவு நோயும் இரத்த சோதனையும்

சாப்பிட முன்பு பரி சோதனை (Fasting BloodSuger)

முதல் நாள் வழக்கமாக மருந்துகளை உட்கொண்டு அன்றைய இரவு 8 மணிக்கு சாப்பிட்டால்

அடுத்த நாள் இரவு 8 மணி வரை பால், ரீ, உணவு ஏதும் உட்கொள்ளாது காலை உடற்பயிற்சி செய்வதற்கு முனனர் பரிசோதனை செய்ய வேண்டும்.

நீரிழிவு நோய் இல்லாத மனிதனுக்கு 100 mg/dl குறைவு

நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு 100 mg/dlருந்து 126 mg/dl

நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு 126 126 mg/dlக்கு அதிகம்

உணவு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரத்தில் பரிசோதனை (Post Prondial Blood Suger)

உணவு உட்கொண்டு சரியாக இரண்டு மணி நேரம் கழித்து பரி சோதனை செய்தல்.

நீரிழிவு நோய் இல்லாத மனித னுக்கு 140 mg/dl க்கு குறைவு.

நீரிழிவு கட்டுப்பாட்டில் உள் ளவர்களுக்கு 140 mg/dl இருந்து 199 mg/dl.

நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு 200 mg/dl க்கு அதிகம்.

மூன்று மாத சக்கரை கட்டுப்பாட்டை அறியும் பரி சோதனை (HbA, C)

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் (Red Blood Cells) ஹீமோகு ளோபின் (Haemoglobin) உள்ளது. இதனுள் குளுக்கோசும் கலந்து காணப்படும். இதனால் இதனை கிளைக்கோ ஹீமோகுளோபின் எனப்படும்.

சிவப்பு அணுக்களின் ஆயுள் 120 நாட்களாகும். எனவு இந்த குளக்கோஸ் ஹீமோகுளோபின் (HBAC) அளவு கடந்த மூன்று மாதத்தினது சக்கரை கட்டுப் பாட்டின் சராசரி அளவை தெரி விக்கும்.

நீரிழிவு நோய் இல்லாத மனித னுக்கு 57%க்கு குறைவு நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ள வர்களுக்கு 5.7% இருந்து 6.4% நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு 6.5% க்கு அதிகம்.

வைத்தியார் ஆர் அஐந்தன் BSMS (Jaffna), MD(S) General Medicine,, General Physician, கிராமிய சித்த வைத்தியசாலை பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம். (மெட்ரோ நியூஸ் 22-10-21)

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

Free Visitor Counters Flag Counter