இரசாயன உர தடை செய்யும் வர்த்தமானி – தவறான ஆலோசனையின் பேரிலான நடவடிக்கை

விவசாயத் துறையின் தற்போதைய நெருக்கடி மற்றும் சீன நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தின் மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கண்டறிவதில் உள்ள சர்ச்சை தொடர்பான டெய்லி மிரரின் கேள்விகளுக்கு விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க பதிலளித்திருக்கிறார்.

விவசாயத் துறை நிபுணரான அவர் வடமேல்மாகாண வயம்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராவார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

உரப்பற்றாக்குறை பிரச்சினையால் விவசாயிகள் போராட்டத்துடன் அத்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எவ்வாறு அதற்கு நீங்கள் தீர்வு காணப் போகிறீர்கள்?

பதில்: குறுகிய காலத்தில், இது ஒரு பிரச்சினை, ஏனெனில் மக்கள் விவசாயிகள் மற்றும் ஏனைய தொழில் முனைவோர் இரசாயன உரத்தை பயன்படுத்த பழக்கப்பட்டிருந்தனர். கடந்த மூன்று அல்லது நான்கு தசாப் தங்களில், அவர்களின் வீட்டு வாசலில் கிடைக்கக் கூடியதாக உரம் வழங்கப்பட்டது. அவர்கள் தங்கள் விருப்பப்படி நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் தங்கள் உரங்களைப் பயன்படுத்துகின்றனர். உர மானியங்கள் கூட வழங்கப்பட்டன. அவர்கள் உண்மையான செலவைக் கூட செலுத்தவில்லை, அதாவது விவசாயிகளின் போராட்டங்களுக்கு நாங்கள் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் அவ்வாறு செய்யப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பரிந்துரையோ தரமோ விடயம் அல்ல. நீங்கள் தாவரங்களை வளர்த்தவுடன், அதற்கு என். பி. கே. தேவை. தாவரத்துக்கு எதுவும் தெரியாது. அதற்கு எந்த உணர்வும் இல்லை. அதற்கு ஊட்டச்சத்து மட்டுமே தேவை. ஊட்டச்சத்து இந்த நாட்டில் உரமாக பெயரிடப்பட்டுள்ளது. உரத்திற்கு யூரியா, ரி. எஸ்.பி. மற்றும் எம்.ஓ.பி. என பெயரிடப்பட்டுள்ளது. நெற் செய்கையிலீடுபடும் விவசாயிகளுக்கு உரமென்பது அது யூரியாவாகவிருக்கிறது. வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு செய்கையிலீடுபடும் ஒரு மலையக விவசாயியிடம் பேசினால், துகள்களைப் போன்ற உரப் பொருட்களென அவற்றின் நிறத்தால் அடையாளப்படுத்துகின்றனர். உள்ளூர் வார்த்தைகளில் அவற்றை அழைக்கிறார்கள். இந்த அப்பாவி விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும்போது அவர்கள் அதிலிருந்து விளைச்சலை விரும்புகிறார்கள். அதற்கு, அவர்களுக்கு தாவர ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும். அவர்கள் பழகிய விதத்தில் அது கிடைக்காதபோது, அவர்கள் கலங்குகிறார்கள். அதே நேரத்தில், இந்த பிரச்சினையை நாங்கள் தீர்க்க வேண்டும். எங்களுக்கு விவசாயம் தேவை.

நீங்கள் நடைமுறையிலுள்ள சம்பந்தப்பட்ட கவலைகளைபற்றி இங்கு குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், பெரும்போகத்திற்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பே அரசு இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதை ஆரம்பித்திருந்தது. அதை ஏன் செய்தீர்கள்?

பதில்: ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் ‘செழிப்பு மற்றும் மகிமை காட்சி’ என்ற கொள்கை ஆவணத்தை நாங்கள் தயார் செய்தபோது, சுற்றுச்சூழலுக்கு உகந்த தாவரச் சத்துக்களைப் பயன்படுத்த வேண்டிய ஒரு முறைமைக்கு நாங்கள் செல்ல விரும்புவதாகத் தெளிவாகக் கூறினோம். அது நச்சுக் குறைந்த தரமான மற்றும் செயற்கை உரத்திற்கு பதிலாக உள்ளது. நச்சு உரத்தைப் பயன்படுத்தும் கலாசாரத்திலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த, நச்சுத்தன்மையற்ற, இயற்கையான , நல்ல தரமான மற்றும் உயர்தர உரத்தைப் பயன்படுத்தும் கலாசாரத்திற்கான மாற்றம் எமக்குத் தேவை. நாங்கள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறோம். விவசாயம் மற்றும் உரம் இரண்டு விடயங்கள். சேதன விவசாயம் பற்றி விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டது. அதை வரைவதில் நானும் ஈடுபட்டேன். இது ஒரு தசாப்தத்தில் அடைய வேண்டிய செயல்முறை. இரசாயன உரத்தின் பயன்பாடு இரத்து செய்யப்படுவதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. இது தவறான ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டது என்று நினைக்கிறேன். அதற்கு நான் பொறுப்பல்ல. அதற்கு ஜனாதிபதி பொறுப்பல்ல. மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில் முடிவெடுப்பவர்களுக்கு நாங்கள் ஆலோசனை கூறும்போது, அது சரியான முறையில் நடக்க வேண்டும். இது நடந்திருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். இப்போது, நாங்கள் அதை திருத்தும் பணியில் உள்ளோம். ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ வேண்டுமென்றே செய்யாததால் நாங்கள் அரசõங்கத்தின் மீது குற்றம் சுமத்தவில்லை. ஒருவேளை,சேதன விவசாயத்தின் சிறப்பு மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம். இதன் விளைவாக,முன்னைய விவசாய முறை பாதிக்கப்பட்டது. நான், மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு விவசாயியாக, இந்த வழியில் தவறான ஆலோசனை வழங்கப்பட்டதாக நம்புகிறேன். அது இரசாயன உரத்தை இரத்து செய்திருக்க முடியாது. இது சுற்றுச்சூழலுக்கு நட்புறவான தாவர ஊட்டச்சத்துக்களை இறக்குமதி செய்ய அனுமதித்திருக்க வேண்டும். வர்த்தமானி அறிவித்தலை அந்தவகையில் அறிவித்திருந்தால், இன்று நாட்டில் ஒரு நல்ல நிலைமை இருந்திருக்கும். பிறகு, நாம் நன்றாக வேலை செய்திருக்க முடியும். தவறான தகவலுடன் நாங்கள் பணியாற்ற வேண்டியிருந்தது. நாங்கள் இப்போது அரசியல் முறைமை மற்றும் நிர்வாக முறைமையின் ஆசீர்வாதத்துடன் அதை சீர் செய்ய முயற்சிக்கிறோம்.

இந்த முடிவை நீங்கள் எவ்வாறு மாற்றப் போகிறீர்கள்?

பதில்: ஜனாதிபதி, அமைச்சர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடலில் கூட, நாங்கள் இந்த பிரச்சினையை சமாளிக்க திட்டமிட்டுள்ளோம் என்பது குறித்து மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம். அந்த தேவையற்ற, நச்சு உரத்திற்கு பதிலாக நாம் தரப்படுத்தப்பட்ட சேதன உரத்துக்கு மாறலாம். யூரியா ஒரு அல்ல. இது பல தொழில்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. நாம் எதையும் அதிகமாகப் பயன்படுத்தும்போது, அது தீங்கு விளைவிக்கும். நாங்கள் இப்போது தரநிலைகள் பிரயோகிக்கும் நடைமுறை மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி அமர்வுகளை கொண்டுவர உள்ளோம். இது ஒரு முழுமையான கட்டமைப்பாகும். அதற்கு எங்களுக்கு சிறிது காலம் தேவை. பெரும்போகம் இப்போது தொடங்கிவிட்டது. எங்களுக்கு உணவு பாதுகாப்பு தேவை. எங்கள் கொள்கையில் விட்டுக்கொடுப்பு தேவை. ஏதேனும் தவறு இருந்தால், அதைத் திருத்துவது என் கடமை.

நாங்கள் அரசாங்க கொள்கைகளை பின்பற்ற விரும்புகிறோம். அதே நேரத்தில், நாங்கள் எங்கள் விவசாயத்தை பாதுகாக்க விரும்புகிறோம்.

தற்போது இருந்துவரும் பிரச்சனையை சமாளிப்பது எவ்வளவுக்கு சவாலானது?

பதில்: இது ஒரு சவால். நான் இங்கு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. ஆரம்பத்தில், எனக்கும் குழப்பமாக இருந்தது. நான் என் நண்பர்களுடன் சவாலை எதிர்கொள்ள விரும்புகிறேன். முறைமையில் உள்ளவர்களை நான் அறிவேன். அவர்களில் பலர் எனது ஆசிரியர்கள். மற்றவர்கள் என் நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களாவர். எனக்கு இந்த ஆட்களின் ஆதரவு உண்டு. அதன் மூலம், நான் அதிகளவு ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் பெறுகிறேன். அரசாங்கத்தின் கொள்கையைப் பொறுத்தவரை, நாங்கள் இயற்கை சார்ந்த, தாவர ஊட்டச்சத்துக்களைப் பெற விரும்புகிறோம். இது அடுத்தகட்டத்திற்கு வரும்போது, நீங்கள் மிக உயர்தரமான, ஏனைய நாடுகளில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாம் தலைமுறை உரத்தை பெறுவீர்கள். இவை மிகவும் புதிய கண்டுபிடிப்புகள். முழு இலங்கையினதும் நெல் மற்றும் இதர துறைகளை உள்ளடக்குவதற்கு எங்களிடம் சேதன உர உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதால் அவை இலங்கைக்கு வருகின்றன. நாங்கள் 30 சதவீதத்தை மட்டுமே தயாரித்துள்ளோம். மீதியை நாங்கள் இறக்குமதி செய்ய வேண்டும். நாங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் போகிறோம். இந்த தயாரிப்புகள் அனைத்தையும் நாங்கள் சோதித்தோம். அவை மிகவும் சிறப்பானவை. நாங்கள் அவற்றை இங்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். விவசாயிகள் அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். விவசாயிகள் விவசாயிகள்தான். வணிகர்கள் வணிகர்கள்தான். நுகர்வோர் நுகர்வோர்தான்.நாங்கள் உரத்தை வழங்குவோம். அதே நேரத்தில், நாங்கள் எங்கள் கொள்கைகளை அமுல்படுத்துவோம். நாங்கள் இங்கு கொண்டுவரும் தயாரிப்பு நானோ தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்பு. இது இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூட அதை ஊக்குவிக்கிறார்.

நாங்கள் ஒவ்வொரு தடவையும் இறக்குமதி செய்ய விரும்பவில்லை. அத்தகைய தயாரிப்புகளை நாங்கள் இங்கு தயாரிக்க விரும்புகிறோம். அடுத்த ஆண்டு, எங்கள் சொந்த தயாரிப்புகளை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஏற்கனவே, சில விவசாயிகள் மக்காச்சோளம் போன்ற பயிர்களை கைவிட்டுள்ளனர். இதன் விளைவாக பயிர்ச் செய்கை மேற்கொள்வதில் குறைப்பு இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

பதில்: அதுதான் நாம் உண்மையில் கவலைப்பட வேண்டிய விட யம். வயலுக்கு செல்வதற்கு முன், விவசாயிகள் தங்கள் மதிப்பீடுகளை வைத்திருக்கிறார்கள். உரம் மற்றும் பிற உள்ளீடுகளைப் பார்க்காமல், அவர்கள் வயல்களுக்கு வந்து வேலை செய்வதில் சிறிது தயக்கம் காட்டுகிறார்கள். அடுத்த பத்து நாட்களுக்குள், அது சரியாகிவிடும். விவசாயிகளிடையே சாதகமற்ற எண்ணங்கள் இருக்கும். நாங்கள் நிர்வாகிகள் என்பது உண்மை. அனைத்து நிர்வாகிகளும் இலங்கையர்கள். அவர்கள் விவசாய முறைமையை எந்த விலை கொடுத்தேனும் அழிக்க விரும்பவில்லை. உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ஜனாதிபதி சரியாகக் கூறியுள்ளார். அவர்களுக்கு தேவையானதை வழங்க நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். எங்கள் உணவுப் பாதுகாப்பை நாங்கள் கவனித்துக் கொள்ள முடியும். மக்காச்சோள செய்கையில் சில குறைப்பு ஏற்பட்டுள்ளது. இது மக்காச் சோளச் செய்கைக் காலம். உரம் இல்லாதபோது, அது ஒரு பிரச்சினை. இரண்டு வாரங்களில், பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கிடைக்கக்கூடிய உரக் கையிருப்புகளை வெளியிடவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மக்காச் சோளம் என்பது கால்நடை தீவனத்தை தயாரிக்க நாம் பயன்படுத்தும் ஒன்று. கால்நடை தீவனம் பற்றாக்குறையாக இருக்கும்போது, அது விலங்கு உற்பத்தி பொருட்கள், குறிப்பாக கோழி உணவு பொருட்களை பாதிக்கும். நீங்கள் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

பதில்: நிதி அமைச்சர் மற்றும் அனைத்து விவசாய நிர்வாகிகள் மற்றும் இரு அமைச்சர்களுடன் இது தொடர்பாக ஒரு உயர் மட்டகலந்துரையாடல் நடத்தினோம். மக்காச் சோளத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அது விலங்கு பொருட்கள் உற்பத்தியை பாதிக்கும். மக்காச் சோளம் உற்பத்தியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது கூடுதலாக வழங்கப்படும். எங்கள் கால்நடைத் தொழில் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மக்கள் செய்கையை விரைவில் தொடங்குவார்கள் என்று நான் நம்புகிறேன். தொற்றுநோய் எங்கள் திட்டங்களை செயற் படுத்துவதையும் பாதித்தது. தளவாடங்களை ஏற்பாடு செய்வதில் நாங்கள் ஒரு பாதகமான நிலையில் இருந்தோம். இப்போது தடுப்பூசி போடுவதுடன் முறைமை செயற்படுகிறது. நாங்கள் சிறிது வேகமாக செல்ல விரும்புகிறோம். மக்காச் சோள செய்கை முறைமைக்கு வரும் மக்காச் சோளம் பயிரிட 100,000 ஹெக் டேயருக்கு நாங்கள் திட்டமிட்டோம். 80,000 பயிரிடப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். மீதமுள்ள நிலப்பரப்பில் உரங்கள் வருகையுடன் செய்கை மேற்கொள்ளப்படும்.

சேதன உμங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறினீர்கள். தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை கண்டறியும் ஆய்வக சோதனைக்கான போதிய வசதிகள் எம்மிடம் உள்ளதா?

பதில்: இது மிகவும் நல்ல கேள்வி. எங்கள் தனியான தாவர ஆய்வகங்கள் முதன்முறையாக இவற்றைச் சோதிக்கவில்லை. தாவர பாதுகாப்புக்கு எங்களிடம் மிகச் சிறந்த வரலாறு உள்ளது. நாட்டிலுள்ள தேவையற்ற நோய்க்கிருமிகளை கொண்டுவருவதற்கு பணியில் இருப்பவர்கள் ஒருபோதும் பொறுப்பேற்கவில்லை. அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். நான் அவர்களுக்கு உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏதேனும் நோய்க்கிருமி வந்தால், அது ஒரு பேரழிவாக இருக்கும். அவர்களுக்கு அதற்கான வசதிகள் உள்ளன. ஏனைய நாடுகளில் உள்ள வசதிகளுடன் இந்த வசதிகள் 100 சதவீதம் சமமானது என்று சொல்ல முடியாது. எங்களிடம் அதிக உப கரணங்கள், நவீன உபகரணங்கள் இருக்க வேண்டும். நாங்கள் நிதி பெற்றுள்ளோம். இந்த வசதிகள் சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால், அவர்கள் நல்ல வேலையைச் செய்கிறார்கள். தற்போதுள்ள வசதிகள் மூலம், அவர்கள் மிகவும் துல்லியமான அறிக்கைகளைப் பெற முடியும். எமது நாட்டின் தாவர மற்றும் விலங்கு பாதுகாப்பு முறைமை திறமையானது. அவர்கள் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடுவதில்லை.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன நைட்μஜன் மாதிரிகள் நிμõகரிக்கப்பட்டதால் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. இதுபோன்ற விடயங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் குறித்த சோதனை அறிக்கையை நிறைவு செய்ய குறைந்தது 67 நாட்கள் ஆகும் என்று சீன தூதμகம் கூறுகிறது. ஆனால், இலங்கை தனிமைப்படுத்தல் திட்ட சேவைகள் மூன்று நாட்களில் அதனை செய்துள்ளன. நிறுவனம் அதை நிμõகரித்தது. நீங்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

பதில்: நான் அறிந்தவரை , என்னிடம் உள்ள தகவல்களின் பிரகாரம் , இது தாவர பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் குழுவினரால் கையாளப்பட்ட தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை. எங்களிடம் தனியான மேலதிக செயலாளர்கள் உள்ளனர். அவர்கள் அதைச் சரியாகக் கையாண்டு எனக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். நாங்கள் முதலில் பெற்ற மாதிரிகள் அத்தகைய பக்டீரியாவுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது ஏன் நடந்தது என்ற சந்தேகம் இருந்தது. அது நடக்கலாம் என்று நாங்கள் கூட நம்பவில்லை. நாங்கள் மிகவும் தெளிவான, வெளிப்படையான, கொள்வனவு நடைமுறைகளைப் பின்பற்றினோம். நாங்கள் அனைத்து தரங்களையும் பின்பற்றினோம். பிறகு, நாங்கள் இரண்டாவது மாதிரியைக் கொண்டு வந்தோம். இது மூன்று வெவ் வேறு இடங்களில் சோதிக்கப்பட்டது. நாங்கள் அதையே கண்டறிந்தோம். எந்த சதவீதத்தில் ஏதேனும் பக்டீரியா இருந்தால், அது ஒரு பிரச்சினை. நிறுவனம் அதன் தயாரிப்பு முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் கிருமிகள் இல்லாமல் சுத்திகரிப்பு செய்யப்பட்டதாக கூறுகிறது. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை எம் ஆட்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர். அது மூன்று நாட்களாக இருந்தாலும் அல்லது நான்கு நாட்களாக இருந்தாலும், அவர்கள் அதைப் பாதுகாக்கிறார்கள். ஒரு முழு அறிக்கையை கொடுக்க ஆறு நாட்கள் ஆகலாம். அத்தகைய பொருளை இங்கு கொண்டுவர வேண்டாம் என்று சமிக்ஞை கொடுத்துள்ளோம்.ஒரு முன்னணி நிறுவனமாக, இது தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்கப் போவதில்லை. எங்களிடம் ஆதாரம் உள்ளது. நாங்கள் அதை நிரூபிக்க போகிறோம். இது அரசாங்கங்களுக்கிடையிலான பிரச்சினை அல்ல. இது நிறுவனங்களுக்கிடையிலான பிரச்சினை அல்ல. நிறுவனம் அதற்கு தேவையான வசதிகளைப் பெறுகிறது. நாங்களும் பதிலளிக்கிறோம். சீனா பல வழிகளில் எமக்கு உதவும் நாடாகும்.இப்போதைக்கு கப்பல் நிறுத்தப்பட்டாலும் செயல்முறை இன்னும் நிறுத்தப்படவில்லை. இது ஒரு சர்வதேச கொள்வனவாகும். எங்களிடமிருந்து எந்த நிதி உரிமைகோரலும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நிறுவனம் அதை உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

உள்நாட்டில் பயிரிடக்கூடிய உணவுப் பயிர்களுக்கு அμசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், இμண்டு வருடங்களுக்குப் பிறகும் உள்நாட்டு அறுவடை போதுமானதாக இல்லை. இந்த பொருட்களின் விலை கூøμ இங்கு மேலாக உயர்ந்து சென்றது. நீங்கள் எப்போது தன்னிறைவை அடையப் போகிறீர்கள்?

பதில்: நீங்கள் 2019 புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நிலைமை சரியாக இருந்தது. கொவிட் சூழ்நிலையால், களதிற்கு செல்லுதல் , ஒருங்கிணைப்பு மற்றும் விதை விநியோகம் தடைப்பட்டது. எங்களிடம் ஆறு பாரிய திட்டங்கள் உள்ளன. எங்களால் அவற்றை இயக்க முடியவில்லை. அமைச்சும் சில சிக்கல்களை எதிர்கொண்டது. பிராந்திய அளவில், சில அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. இவை அனைத்தும் தாமதத்திற்கு வழிவகுத்தன. நாங்கள் இப்போது அதைஎட்டிப் பிடிக்கிறோம். கடந்த மூன்று மாதங்களில், நாங்கள் அவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளோம். திட்ட முகாமைத்துவம் எனது பாடங்களில் ஒன்றாகும். இது எனது நிபுணத்துவம் வாய்ந்த பகுதி. நான் கடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற திட்ட அமுலாக்கல் மற்றும் நிர்வாகத்தில் ஈடுபட்டேன். பணியில் எனது பங்களிப்பை வழங்க இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. யாரும் பொறுப்பேற்க விரும்பாத நேரத்தில் நான் இந்த பதவியை ஏற்றுக்கொண்டேன். நான் துணைவேந்தராக இருந்தேன். எனக்கு எல்லா சலுகைகளும் இருந்தன. நான் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். நான் இங்கு வேலையை ஏற்றுக்கொண்டு வழங்க விரும்பினேன். என்னால் முடியும் என்று உறுதியாக இருந்தேன். விவசாயம் உரம் மட்டுமல்ல. இது நூற்றுக்கணக்கான ஏனைய விட யங்களில் ஒன்றாகும். எனது குழு மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையவர்களுடன் இணைந்து என்னால் பணியை நிறை வேற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இலங்கை தன்னிறைவை அடைய முடியும் என்று உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

பதில்: நான் நம்புகிறேன். உள்ளீடுகள் கொடுக்கப்பட்டால், அதைச் செய்ய முடியும். கடந்த பல தசாப்தங்களாக விவசாயம் குறித்த தேசிய கொள்கை எங்களிடம் இல்லை. அதை மேம்படுத்துவதில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டேன். நான் அதை அமைச்சரவையில் சமர்ப்பித்தேன். (தினக்குரல் 21-10-21)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter