இலங்கை சந்தையில் ஏற்பட்டுள்ள மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள் தினசரி மூடப்படுவதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையி ழப்பு ஏற்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரெஜிபோர்ம் உற்பத்திக்குத் தேவையான துகள்கள் போன்ற மூலப் பொருட்கள் கிடைக்காமையினால் ரெஜிபோர்ம் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
விவசாயிகள் தொழிலை கைவிடுகின்றனர். உற்பத்திக்கான மூலப்பொருட்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கொள்கை விளக்கத்தில் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு உறுதியளிக்கப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பால்மாவுக்கு பதிலாக திரவப் பாலை பயன்படுத்துமாறு பொது மக்களை அரசாங்கம் வழி நடத்துவதும் இதற்கு இணையான செயற்பாடாகும். பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன செய்தது. எனினும் அதன் பயன்பாட்டை மாத்திரம் ஊக்குவிக்கின்றது.
அதிகாரிகள் கறவை மாடுகளை இறக்குமதி செய்ய வேண்டும். திரவப் பால் உற்பத்தியாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி அவர்களுக்குத் தேவையான நிபுணத்துவ அறிவை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
க.பிரசன்னா (தினக்குரல் 18-10-21)