இரு பிள்ளைகளை கிணற்றில் வீசிய சம்பவம் முழுமையாக

மட்டக்களப்பு மாவட்டத்தின்‌ கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர்‌ பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை கிராமத்தில்‌ நேற்று அதிகாலை தனது இரண்டு பிள்ளைகளையும்‌ தந்தையே கிணற்றினுள்‌ வீசி கொலை செய்த சம்பவத்தினால்‌ அப்‌ பகுதி முழுவதுமே சோகத்தில்‌ ஆழந்துள்ளது.
கொரோனா வைரஸ்‌ அச்சத்தினாலும்‌ ஊடரங்குக்கு கட்டுப்பட்டும்‌ மக்கள்‌ வீடுகளில்‌ முடங்கியுள்ள நிலையிலேயே இந்த கொடூர சம்பவம்‌ பதிவாகியுள்ளது.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில்‌ வசிக்கும்‌ அஸிமுல்‌ ஹக்‌ (வயது 10), அஸிமுல்‌ தாஹியா (வயது 07) ஆகிய இரண்டு குழந்தைகளையே அவர்களது தந்‌ைத செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தனது வீட்டு கிணற்றில்‌ வீசி கொலை செய்துள்ளார்‌.

குறித்த சம்பவம்‌ தொடர்பில்‌ தனது இரண்டு பிள்ளைகளையும்‌ கொலை செய்த குற்றச்சாட்டில்‌ முகம்மது லெப்பை சுலைமா லெப்பை (வயது 45) என்பவர்‌ கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ்‌ நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்‌.

குறித்த பிள்ளைகளின்‌ தாய்‌ கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர்‌ சுகயீனம்‌ காரணமான மரணமடைந்த நிலையில்‌ அவர்களது தந்‌ைத, ஆண்‌ பிள்ளையை அட்டுலுகம பிரதேசத்திலுள்ள காப்பகத்திலும்‌, பெண்‌ பிள்ளையை ரத்மலான பிரதேசத்திலுள்ள காப்பகத்திலும்‌ சேர்த்துள்ளார்‌. எனினும்‌ ஓரிரு மாதங்களுக்கு முன்னர்‌ பிள்ளைகளை ஏறாவூரில்‌ உள்ள காப்பகம்‌ ஒன்றில்‌ சேர்ப்பதற்காக ஊருக்கு அழைத்து வந்திருந்தார்‌.

இதில்‌ பெண்‌ பிள்ளையானது ஆங்கில மொழியில்‌ கல்வி கற்று வந்ததாகவும்‌, பிள்ளைகளை பாடசாலையில்‌ இருந்து விலக்கிச்‌ செல்ல வேண்டாம்‌ என்று பாடசாலை நிருவாகம்‌ கூறியதாகவும்‌ அறிய முடிகின்றது. குறித்த நபர்‌ அண்மைக்‌ காலமாக உளவியல்‌ நீதியாக பாதிப்படைந்திருந்துள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு குற்றத்தைப்‌ புரிந்திருப்பதாக நம்பப்படுகிறது. உறவினர்களினதும்‌ அயலவர்களினதும்‌ தகவல்களுக்கமைய, தன்னை யாரோ கொல்ல முனைவதாக அவர்‌ அடிக்கடி கூறி வந்துள்ளார்‌. தான்‌ அவ்வாறு இறந்தால்‌ பிள்ளைகள்‌ அநாதையாகி விடுவார்கள்‌ என்றும்‌ கூறுவார்‌. இதன்‌ காரணத்தினாலேயே அவர்‌ பிள்ளைகளை கொலை செய்திருக்கலாம்‌ என தாம்‌ சந்தேகிப்பதாக சந்தேக நபரின்‌ சகோதரரான முகமது காசீம்‌ (வயது 51) தெரிவித்தார்‌.

அவர்‌ மேலும்‌ கூறுகையில்‌, எனது தம்பி செவ்வாய்கிழமை நள்ளிரவு ஒன்றரை மணியளவில்‌ வீட்டுக்கு வந்து எனது கதவை தட்டிய போது நான்‌ பயத்தில்‌ கதவை திறந்து பார்த்த போது என்னை கொலை செய்வதற்கு துரத்தி வருகின்றனர்‌ என்று கூறினார்‌. உன்னை யார்‌ துரத்துகின்றனர்‌ என்று கேட்டபடி இருந்தேன்‌.

சற்று நேரம்‌ கழிந்த நிலையில்‌ எனது தங்கையின்‌ மருமகன்‌ தொலைபேசி ஊடக தொடர்பு கொண்டு நித்திரையில்‌ இருந்த இரண்டு பிள்ளைகளையும்‌, உங்கள்‌ தம்பியையும்‌ காணவில்லை என்று கூறினார்‌. அதன்‌ பிற்பாடு தம்பியிடம்‌ பிள்ளைகள்‌ எங்கே என்று வினவ பிள்ளைகள்‌ இறந்துவிட்டனர்‌ என்று சொன்னார்‌. உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்து விட்டு தம்பி இருந்த வீட்டுக்கு தங்கையுடன்‌ சென்று கிணற்றை பார்த்த போது பிள்ளைகள்‌ இறந்த நிலையில்‌ காணப்பட்டனர்‌.

தம்பியிடம்‌ இது பற்றிக்‌ கேட்ட போது இரண்டு பிள்ளைகளுடன்‌ தானும்‌ கிணற்றில்‌ குதித்ததாகவும்‌, கிணற்றில்‌ நீர்‌ குறைவாக இருந்தமையால்‌ தாழ முடியாமல்‌ மேலே வந்ததாகவும்‌ அவர்‌ தெரிவித்தார்‌.

எனது தம்பியின்‌ மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்னர்‌ சுகயீனம்‌ காரணமாக இறந்துவிட்டார்‌. இவர்களை எனது தம்பி மற்றும்‌ தங்கை ஆகியோர்‌ பராமரித்து வந்த நிலையில்‌ கொழும்பிலுள்ள காப்பகத்தில்‌ கல்வி கற்பதற்கு சேர்த்துள்ளார்‌ என்றார்‌. “எனக்கு நிம்மதி இல்லை. நானும்‌
பிள்ளைகளும்‌ மரணிக்கப்‌ போகின்றோம்‌” என்று இரண்டு நாட்களாக அவர்‌ கூறித்‌ திரிந்தார்‌ என உயிரிழந்த பிள்ளைகளின்‌ பெரியம்மாவான சம்சுன்‌ நிஹாரா (வயது 47) தெரிவித்தார்‌.

இவருக்கும்‌ இவரது பிள்ளைகளுக்கும்‌ நானும்‌, எனது கணவரின்‌ சகோதரிகளும்‌ உணவு வழங்கி வந்தோம்‌. இவர்களுக்கு சாப்பாடுகளில்‌ எந்த குறையும்‌ இல்லை. பட்டினியினால்‌ இவ்வாறு கொலை செய்திருக்க முடியாது. எனக்கு நிம்மதி இல்லை. நானும்‌ பிள்ளைகளும்‌ மரணிக்க போகின்றோம்‌
என்று இரண்டு நாட்களாக கூறி திரிந்தார்‌. இவர்‌ சும்மா கூறுகின்றார்‌ என்று நினைத்து நாங்கள்‌ இதனை கவனிக்கவில்லை. திங்கட்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு சென்றே இந்த வேலையை பார்த்துள்ளார்‌” என்று கண்ணீர்‌ விட்டு அழுதவாறு கூறினார்‌.

iதிங்கட்கிழமை இரவு கூட தனது இரண்டு பிள்ளைகளையும்‌ தனது மடியில்‌ வைத்து உறங்கச்‌ செய்ததாகவும்‌, அவர்‌ தனது பிள்ளைகளுடன்‌ இரக்கமாக நடந்து கொள்பவர்‌ என்றும்‌ இவ்வாறு ஏன்‌ செய்தார்‌ என்று புரியவில்லை என்றும்‌ அயலவர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌. (எஸ்.எம்.எம் முர்ஷித்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter