தடுப்பூசி ஏற்றியோருக்கே உம்ராவுக்கு அனுமதி -சவூதி சுகாதார அமைச்சு-
சினோபாம் பெற்றவர்கள் மேலதிக தடுப்பூசி பெறுவது கட்டாயம்
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி களை ஏற்றிக்கொண்டுள்ள யாத்திரிகர்களுக்கு மாத்திரமே உம்ராவை நிறைவேற்ற முடியும் என்றும் மக்காவின் பெரிய பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடமுடியும் என்றும் சவூதிஅரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தவக்கல்னா (Tawakkalna) வின் விண்ணப்பம் எதிர்வரும் 10 ஆம் இகதக்கு பின் பூரணமாக ஒழுங்குபடுத்தப்படும் என சவூதி சுகாதார அமைச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நோய் தடுக்கும் சக்தியடையவர்கள் என தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டுள்ளவர்களே கருதப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
தவக்கல்னா விண்ணப்பத்தில் விண்ணப்பதாரிகளின் சுகாதார நிலைமை கொரோனா தடுப்பூசிகள் இரண்டினை ஏற்றிக்கொண்டுள்ளவர்களினதே வெளிப்படுத்தப்படும் பைஸர் பயோடெக், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனேகா மற்றும் மொடர்னா அல்லது ஜோன்சன் & ஜோன்சன் ஒரு தடுப்பூசி ஏற்றுக்கொண்டவர்களினதே சுகாதார நிலைமை விண்ணப்பத்தில் வெளிப்படுத்தப்படும்.
நோய் தடுக்கும் சக்தி குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட தடுப்பூசி இரண்டாவது டோஸ் ஏற்றிக்கொண்ட நாளிலிருந்து ஆரம்பமாகும். இதேவேளை ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களின் நோய் தடுக்கும் சக்தி தடுப்பூசி ஏற்றி 14 நாட்களின் பின்பே ஆரம்பமாகும்.
இதே வேளை சைனோபார்ம் மற்றும் சினோவக் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளவர்களின் நோய் தடுக்கும் சக்தியை உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அனுமதித்துள்ளது. என்றாலும் சவூதி அரேபியா அனுமதித்துள்ள தடுப்பூசிகளில் ஒன்றினை மேலதிகமாக பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என சவூதி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி ஒன்றினை ஏற்றிக்கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி முதலாவது டோஸ் ஏற்றிக்கொள்வதற்கு முன்போ அல்லது பின்போ தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் சுகாதார நிலைமை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பைசர், அஸ்ட்ரா செனேகா அல்லது மொடர்னா தடுப்பூசி முதலாவது டோஸ் ஏற்றிக்கொண்டவர்கள்போன்று சைனோபார்ம் மற்றும் சினோவக் இரண்டு டோஸ்கள் ஏற்றிக்கொண்டவர்கள் ஒரு டோஸ் ஏற்றிக்கொண்டவர்களாகவே தவக்கல்னா விண்ணப்பத்தில் கருதப்படுவார்கள்.
ஹஜ், உம்ரா அமைச்சு வெளியிட்டுள்ள விதிகளின்படி உம்ராவுக்கான அனுமதியும் மக்கா பெரிய பள்ளிவாசலில் தொழுகைக்கான அனுமதியும் குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றுக்கொண்டுள்ள யாத்திரிகர்களுக்கே வழங்கப்படும்.
அத்தோடு முதலாவது தடுப்பூசி ஏற்றிக் கொண்டு 14 நாட்கள் பூர்த்தியானவர்கள் மற்றும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் சுகாதார நிலைமை தவக்கல்னா விண்ணப்பத்தில் உள்ளடங்கியுள்ள நிலைமையை அவதானித்து அனுமதி வழங்கப்படும். இந்த விண்ணப்பங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆராயப்பட்டே தீர்மானிக்கப்படும்.
ஒரு தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளவர்கள் அல்லது கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் உம்ரா யாத்திரைக்கான அனுமதியைப் பெற முடியாது. அத்தோடு பெரிய பள்ளி வாசலில் தொழுகைகளில் ஈடுபட முடியாது மற்றும் மதீனாவில் நபிகள் நாயகத்தின் பள்ளிவாசல் மற்றும் அவரது அடக்கஸ்தலத்துக்கும், ரவ்தா சரீபுக்கும் விஜயம் செய்ய முடியாது.
ஒரு தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களின் நோய்தடுப்புச்சக்தி, மற்றும் அவர்களது சுகாதார நிலைமை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என சவூதி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) – விடிவெள்ளி பத்திரிகை 7-10-21