சஹ்ரானின் அலைபேசியின் மதர்போர்ட் எங்கே?

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் ஒரு புறம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிடிக்கப் பார்க்கின்றனர். மறுபுறம் சேவை செய்த புலனாய்வு பிரிவினரைப் பிடிக்கப் பார்க்கின்றனர். புலனாய்வு பிரிவினருக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று எவரையும் சுட முடியாது. அவர்களால் தகவல்களை பகிர மாத்திரமே முடியும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பல கலந்துரையாடல்களில் தானும் கலந்துகொண்டதாக தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற அன்று காலையில் கூட நிலந்த ஜயவர்தன இந்தத் தகவல்களை பொலிஸாருக்கு வழங்கினார். ஏனெனில் அவரால் தகவல்களை மாத்திரமே வழங்க முடியும் தவிர ஆயுதங்களை எடுத்துச் சென்று எவரையும் சுட முடியாது.

இத்தாக்குதலின் பிரதான தற்கொலைதாரி ,சஹ்ரானின் அலைபேசியின் மதர்போர்டை (mother board )யார் எடுத்தது என்பது குறித்து யாராவது கதைத்துள்ளார்களா என கேள்வி எழுப்பினார். இதனை எடுக்கும் போது பொலிஸாரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. வேறொரு நாட்டுக்கு எடுத்துச் செல்ல புலனாய்வு பிரிவுக்கு. எனவே அதைத் தான் முதலில் தேட வேண்டும்.

இத்தாக்குதலை நடத்திய நபரின் அலைபேசியில் தானே சகல விடயங்களும் இருக்கும். எனவே, இந்த அலைபேசியின் மதர்போர்டை வேறொரு நாட்டுக்கு புலனாய்வுக்காக எடுத்துச் செல்வார்களாயின் அதற்கு இந்த நாட்டு பொலிஸ் மற்றும் நீதிமன்றம் அனுமதி வழங்குமாயின் அந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை அந்த மதர்போர்டை எடுத்துச் சென்றவரிடம் கதைத்து தெரிந்துக்கொள்ளலாம் என்றார்.

எனவே முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள்,உறுப்பினர்கள் மீது விரல் நீட்டுவதால் எந்த பலனும் கிடைத்து விடப்போவதில்லை என்றார். இது தொடர்பில் யாரும் கதைக்கமாட்டார்கள். நாம் எப்போதும் கூறுவது இது மைத்திரிபால சிறிசேனவை கட்டம்கட்டும் ஒரு நடவடிக்கை என சகலருக்கும் தெரியும். அதேப்போல் அவரை அதிகாரத்திலிருந்து கீழிறக்கியம் ஒர் அரசியல் சதியாகும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமாகக் கொண்டு வந்ததன் பின்னரே அந்த சதி நடந்தது என்றார். -தமிழ் மிற்றோர்

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter