அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகாமையினது முன்னாள் ஒப்பந்தக்காரர் எட்வர்ட் யோசப் ஸ்னோடென் தமது சிறிய ஹொங்கொங் குடியிருப்பில் மறைத்து வைத்து பாதுகாத்த நான்கு இலங்கையர்களுக்கு கனடா தஞ்சம் அளித்துள்ளது.
சுப்புன் திலின கெளபத, நதீகா தில்ருக்ஷி நோனிஸ் மற்றும் அவர்களின் பிள்ளைகளான சேதும்தி, தினாத் ஆகியோருக்கே கனடான தற்சமயம் தஞ்சம் அளித்துள்ளது.
இவர்கள் தற்போது கனடாவின் டொராண்டோவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதுடன், மாண்ட்ரீலுக்கு சென்று தங்களது புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கவுள்ளனர்.
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ இரகசியங்கள் மற்றும் வெளியுறவுத்துறை இரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட்டார்.
இதையடுத்து கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டதால் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். அமெரிக்கா இரகசியமாக நட்பு நாடுகளை கண்கானித்த விவகாரத்தை ஸ்னோடென் வெளியிட்டதால் அமெரிக்காவுக்கு அதன் நட்பு நாடுகளிடம் இருந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
-வீரகேசரி-