மின் வெட்டு தொடர்பில் வெளியான விஷேட அறிக்கை

எதிர்வரும் சனிக்கிழமை (22) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாளைய தினம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதான மின் பரிமாற்ற அமைப்புக்கு தொடர்புபடுத்த உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 18 ஆம் திகதி முதல் நாளாந்தம் ஒரு மணித்தியாலயம் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த 17 ஆம் திகதி மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter